azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The most important reason for bondage is giving too much freedom to the mind. When an animal is tethered to a post, it will not be able to go elsewhere. It cannot show anger or violence or do harm to any person. But if it is let loose, it can roam around, destroy crops and cause loss and harm to others. In the process it may get beaten for the mischief done. Similarly, the mind must be bound by certain regulations and limits. As long as man lives within certain rules and disciplines, he will be able to maintain a good name and lead a happy and useful life. Once he crosses these limits he will go astray.(Divine Discourse, Feb 17, 1985)
( பந்தங்களில் ) பிணைப்பு ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம் மனதிற்கு தேவைக்கு அதிகமான சுதந்திரம் தருவது தான். ஒரு விலங்கை ஒரு கம்பத்தில் கட்டி இருக்கும் வரை அதனால் வேறு எங்கும் போக முடியாது. கோபம் அல்லது வன்முறையையோ காட்டவோ,எவருக்கும் தீங்கு இழைக்கவோ அதனால் முடியாது. ஆனால், அதை அவிழ்த்து விட்டு விட்டால், எங்கும் திரிந்து, பயிர்களை நாசம் செய்து, பிறருக்கு நஷ்டமும், தீங்கும் இழைத்து விடும். இவ்வாறு செய்யும் போது, அது செய்த தொல்லைக்காக அடியும் வாங்கும். அவ்வாறே மனமும் சில எல்லைகள் மற்றும் விதிகளுக்குக் கட்டுப் பட்டு இருக்க வேண்டும். எப்போது வரை ஒரு மனிதன் சில கட்டுப்பாடுகளுக்கும், விதி முறைகளுக்கும் உட்பட்டு வாழ்கிறானோ, அது வரை அவன் நல்ல பெயர் எடுத்து மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள வாழ்க்கை நடத்த முடியும்.ஒருமுறை எல்லைகளைத் தாண்டி விட்டால், அவன் வீழ்ச்சி அடைந்து விடுவான்.