azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 15 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 15 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In the Geetha Lord Krishna says, “Arjuna! People give up revering and seeking Me, their very own Self. How foolish of them! They are not anxious to reach Me; but pursue lesser attainments that are untrue and transitory. The reason for this strange behaviour is the desire for quick results. People seek only that which is available here and now; that which is in a concrete form and is capable of being grasped by their senses; they are carried away by the attraction of flimsy pleasures. People also do not generally have the needed patience. They attach greater importance to the gross body, (sthula sarira). The achievement of Jnana (wisdom) is the true inner victory; it is won after long and arduous struggle. The few who are spiritually minded yearn for the Divine. Such wise people are indeed blessed. Look upon every act as but the execution of His order and as leading to His grace.”(Geetha Vahini, Ch 9)
ஸ்ரீமத் பகவத் கீதையில்,பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,''அர்ஜூனா ! மனிதர்கள் அவர்களது சொந்த மற்றும் உண்மை நிலையான, என்னை மதிப்பது மற்றும் நாடுவதை விட்டு விடுகிறார்கள். அவர்களது முட்டாள்தனத்தை என்னென்பது ! என்னை அடைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு இல்லை;பொய்மையான நிலையற்ற கீழ்த்தரமானவற்றை அடைவதற்கு முனைகிறார்கள். இப்படிப்பட்ட வினோதமான நடத்தைக்கு, துரிதமாக பயன்களை அடைய வேண்டும் என்ற அவர்களது ஆசையே காரணம். மனிதர்கள் இப்போதே ,இங்கேயே கிடைப்பவற்றை மட்டுமே நாடுகிறார்கள்; அதாவது அவர்களது புலன்களால் பெறப்படுபவை மற்றும் கண்ணில் ஸ்தூலமாகத் காணப்படுபவைகளையே; அற்பமான இன்பங்களின் கவர்ச்சியால் ஈர்க்கப் படுகிறார்கள். மனிதர்களிடமும் சாதாரணமாக தேவையான பொறுமை இருப்பதில்லை. அவர்கள் ஸ்தூல சரீரத்திற்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஞானம் பெறுவதே உண்மையான உள்ளார்ந்த வெற்றியாகும்;நீண்ட,கடினமான போராட்டத்தினால் தான் அதைப் பெற முடியும். ஆன்மீக மனப்பாங்குடைய சிலரே தெய்வீகத்திற்காக ஏங்குகிறார்கள்.இப்படிப்பட்ட அறிவுள்ள மனிதர்கள் உண்மையிலேயே இறையருள் பெற்றவர்கள். ஒவ்வொரு செயலையும் இறைவனது ஆணையை நிறைவேற்றுவது மற்றும் அவனது அருளுக்கு இட்டும் செல்பவையே அன்றி வேறில்லை என்று கருதுங்கள்.