azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Develop love for all. Do not think that a person is superior or more devoted than the rest. Do not look down upon anyone as a disturbance and nuisance. If you have love for God, you will love all, for God is in every one. You sing bhajans (devotional songs) which say “God is all, God is in everyone” (Antha Sai Mayam). If that is true, how can you have love for God alone? You have pictures of God in your home or in the temple. If anyone speaks ill of any of them, do you like it? You don’t! So too, when you treat anyone harshly or speak rudely to anyone, you are treating Me harshly. When you are insulting anyone, you are insulting Me. I desire that you should conduct yourselves in a loving, harmonious and peaceful manner at all times! Serve everyone gladly, as you would serve Me.(Divine Discourse, Feb 24, 1965.)
அனைவரிடத்திலும் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.எந்த ஒருவரையும் பிறரை விட உயர்ந்தவராகவோ அல்லது அதிக பக்தி கொண்டவராகவோ எண்ணாதீர்கள். யாரையும் ஒரு இடையூராகவோ, தொந்தரவாகவோ கருதாதீர்கள். நீங்கள் இறைவனை நேசிப்பவரானால், அனைவரையும் நேசிக்க வேண்டும், ஏனெனில் இறைவன் அனைத்திலும் இருக்கிறான். நீங்கள்,''இறைவனே அனைத்தும்,இறைவன் எல்லோரிடத்திலும் இருக்கிறான் ( அந்த சாயிமயம் )'' என்று பஜனை பாடுகிறீர்கள். அது உண்மையானால், இறைவனிடம் மட்டுமே உங்களுக்கு எப்படி அன்பு இருக்க முடியும்? நீங்கள் இறைவனது படங்களை உங்கள் வீட்டில் அல்லது கோவிலில் வைத்திருக்கிறீர்கள். அவற்றை யாராவது இகழ்ந்து பேசினால்,உங்களுக்குப் பிடிக்கிறதா? இல்லையே !அதே போல,நீங்கள் எவரையாவது கடுமையாக நடத்தினாலோ அல்லது எவரிடமாவது அநாகரீகமாகப் பேசினாலோ, என்னை கடுமையாக நடத்துகிறீர்கள் என்றே பொருள். நீங்கள் யாரையாவது அவமதித்தால், என்னை அவமதிக்கிறீர்கள். எல்லா நேரத்திலும் நீங்கள் அன்பான,இசைவான மற்றும் அமைதியான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு எப்படிச் சேவை செய்வீர்களோ,அதே போல மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.