azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 10 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 10 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Some are always worn out by ills that affect the body; they are called the Aarthas. There are others who are worried by the struggle for prosperity, power, property, fame, etc.; they are Artha-arthis. The third type are those that yearn for the realisation of the Atma, and such people read the scriptures, move in the company of spiritual aspirants, act along the lines of scriptures - sadachara (Right Conduct), and are always motivated to reach the Lord; they are called Jijnaasus. The fourth is the Jnani, who is ளKalpavriksha (wish-fulfilling divine tree). My task is to give each what they ask for, without any prejudice or favouritism. Can any fault be imputed to the Sun shining its rays? The rays of the Sun fall equally upon all that are directly in their way; but if someone is behind something else, inside a closed room for instance, how can the Sun illumine them? Cultivate higher yearnings and receive accordingly! (Geeta Vahini, Ch 8)
சிலர் உடலைப் பாதிக்கும் நோய்களால் எப்போதும் தேய்ந்து,உருக்குலைந்து போகிறார்கள்; இவர்கள் '' அர்த்தாஸ் '' எனப்படுகிறார்கள். மற்றவர்கள், பணம், பதவி, சொத்துக்கள், புகழ் போன்றவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தின் கவலைகளில் ஆழ்ந்திருக்கிறார்கள்;இவர்கள் '' அர்தார்த்தி '' எனப்படுவர். மூன்றாவது வகையான மனிதர்கள் ஆத்மாவை உணருவதற்கான பேராவல் கொண்டிருப்பர்; இப்படிப்பட்டவர்கள், புனித நூல்களைப் படித்து, ஆன்மீக சாதகர்களின் ஸத்ஸங்கத்தில் இருந்து கொண்டு, வேதங்களின் கட்டளைப் படி நல்லொழுக்கத்துடன் (சதாசாரா) நடப்பார்கள்; எப்போதும் இறைவனை அடைய வேண்டும் என்ற உந்துதலுடன் இருப்பார்கள்; இவர்கள் ''ஜிங்ஞாஸூஸ் '' என அழைக்கப் படுகிறார்கள். நான்காவது வகையில் இருப்பவரே, எப்போதும் தெய்வீகத்தில் ஆழ்ந்திருக்கும் '' ஞானி '' எனப்படுவோர். நான் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் '' கல்பகத் தரு '' போன்றவன். எந்த விருப்பு, வெறுப்பும் இன்றி ஒவ்வொருவரும் நாடுவதை அளிப்பதே என் பணி. கிரணங்களுடன் ஒளி விடும் சூரியன் மீது குறை காண இயலுமா? சூரியனது கிரணங்கள் அவற்றின் வழியில் நேராக இருக்கும் அனைத்தின் மீதும் ஒரே மாதிரியாகத்தான் விழுகின்றன. ஆனால் யாராவது ஏதாவது ஒன்றின் பின் இருந்தாலோ,ஒருவேளை ஒரு மூடிய அறைக்குள் இருந்தாலோ,சூரியன் எவ்வாறு அவர்களுக்கு ஒளி தர முடியும்? உயர்ந்த நோக்கங்களை வளர்த்துக் கொண்டு, அதன்படியே அவற்றைப் பெறுங்கள் !