azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Remember always that it is easy to do what is pleasant. But it is very difficult to be engaged in what is beneficial. Not all that is pleasant is profitable. Success comes to those who give up the path strewn with roses and brave the hammer blows and sword thrusts of the path fraught with danger. As a matter of fact, no road is strewn with rose petals. Life is a battle field (a Dharmakshetra), where duties and desires are always in conflict. Smother the fiery fumes of desire, of hatred and anger that rise up in your hearts; it is sheer cowardice to yield to these enemies that turn you into beasts. Meet all obstacles with courage. Difficulties make you tough and strong.( Divine Discourse, Feb 20, 1965.)
இனிமையாக இருப்பவற்றைச் செய்வது மிகவும் எளிது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் நன்மை அளிப்பவற்றைச் செய்வது மிகவும் கடினமானதே. இனிமையாக இருக்கும் அனைத்தும் லாபம் தருபவை அல்ல. ரோஜா மலர்கள் தூவப்பட்டுள்ள ( இதமான ) பாதையை விடுத்து,சம்மட்டி அடிகள்,கத்துக் குத்துக்கள் என்ற அபாயங்கள் நிறைந்த பாதையை எதிர் கொள்ளுபவருக்கே வெற்றி கிடைக்கும். உண்மையில் ,எந்தப் பாதையுமே ரோஜா இதழ்கள் தூவப்பட்டதல்ல. கடமைகளுக்கும்,ஆசைகளுக்கும் இடையே எப்போதும் சண்டை நடக்கும் போர்க்களமே ( தர்மக்ஷேத்திரம் ) வாழ்க்கை . உங்கள் இதயத்தில் எழும் கொழுந்து விட்டு எறியும் ஆசைகள், வெறுப்பு,கோபம் ஆகியவற்றைத் தணியுங்கள்; உங்களை மிருகங்களாக மாற்றும் இந்த எதிரிகளுக்குப் பணிவது வெறும் கோழைத்தனமாகும். எல்லா இடையூறுகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். துன்பங்கள் உங்களைத் திண்மையும்,வலிமையும் உள்ளவராக ஆக்குகின்றன.