azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

In Mahabharatha, Krishna declared to Arjuna that fostering of Dharma is His work. The term Sadhu refers to one who does not deviate from his duty. The wicked revel in creating trouble for such men and in indulging in acts contrary to the injunctions of the scriptures. What then is the establishment of Dharma? It is acting strictly according to the tenets laid down in the scriptures; spreading among people the glory and the splendour of a life lived in Dharma; stabilising reverence towards the holy scriptures, towards God, Avatars and Paramapurushas (evolved souls) and the Sadhana (spiritual practices) that leads to liberation and blessedness beyond this life. It is called Dharma-samsthaapana, Dharmarakshana or Dharmoddhaarana (establishment, protection or revival of righteousness). "Whatever I do, it is for this high purpose; nothing is for My own advancement. Those who know this secret can escape birth and death," said Krishna.(Geetha Vahini, Ch 8)
மஹாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணர்,அர்ஜூனனிடம் தர்மத்தைப் பேணிக் காப்பது தன் பணி என்று பறைசாற்றுகிறார். ''சாது'' என்ற சொல்,தனது கடமையிலிருந்து வழுவாதவரைக் குறிக்கிறது.தீயவர்கள் இப்படிப் பட்ட மனிதர்களுக்குத் தொல்லை கொடுத்து, சாஸ்திரங்களின் கட்டளைகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படி என்றால் தர்மத்தை நிலை நாட்டுவது என்றால் என்ன? அது சாஸ்திரங்களில் வரையறுக்கப் பட்ட கோட்பாடுகளுக்குத் தக்கவாறு பிறழாது நடப்பது; தர்மத்தில் வாழும் வாழ்க்கையின் புகழ் மற்றும் உயர்வை மக்களிடம் பரப்புவது; வேதங்கள், இறைவன், அவதாரங்கள் மற்றும் பரமபுருஷர்கள் மேலும் இந்த வாழ்க்கைக்கும் அப்பாற்பட்ட மோக்ஷம் மற்றும் இறை அருளை நல்கும் ஆன்மீக சாதனைகள் ஆகியவற்றின் பால் மதிப்பும் மரியாதையையும் நிலை நாட்டுவது ஆகிவையே. இதுவே 'தர்மஸம்ஸ்தாபனா' ( தர்மத்தை நிலை நாட்டுவது ), 'தர்ம ஸம்ரக்ஷனா' ( தர்மத்தைக் காப்பது ),' தர்மோத்தாரணா '( தர்மத்திற்கு புத்துயுர் ஊட்டுவது) எனப்படுகிறது. '' நான் எதைச் செய்தாலும், அது ஒரு உயரிய நோக்கத்திற்காகவே;எதுவும் எனது முன்னேற்றத்திற்காக அல்ல.இந்த ரகசியத்தை அறிந்தவர்கள் பிறப்பு மற்றும் இறப்பிலிருந்து தப்பிக்க முடியும் '' என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.