azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Feb 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Virtuous character is found in Nature, and among the animals and birds as well. In the epic Ramayana, the eagle Jatayu was saved as a result of his virtuous nature (Guna). That is the reason why several monkeys too were given a chance to serve and be blessed with His grace. The same reason prompted the Lord to bless the squirrels who contributed to building the bridge in the epic. A monk or devotee is not made by a string of beads, an ochre robe and a stick in the hand. The clothes one wears and the language one has on the tongue do not decide who is a virtuous person and who is not; it is one’s conduct that settles it. Even animals have the potentiality to be good. Fostering goodness everywhere in everyone is the best means of ensuring the welfare of the world.(Geetha Vahini, Ch 8)
நல்லொழுக்கமுடையோரை,இயற்கையில் காணலாம்;மிருகங்கள்,பறவைகள் ஆகியவை மத்தியிலும் கூட .இராமாயண இதிகாசத்தில் கழுகான ஜடாயு அதனது சீரிய குணத்தால் காப்பாற்றப் பட்டது. இதே காரணத்தால் தான் பல குரங்குகளும் (இராம) சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்று,இறைவனது அருளுக்குப் பாத்திரமாயின. இந்த இதிகாசத்தில்,இதே காரணம் தான் பாலம் கட்ட உதவிய அணில்களுக்கு அருள் புரிய இறைவனைத் தூண்டியது. ஒரு துறவி அல்லது பக்தன் என்பவன் ஜபமாலையாலோ,காவி உடையாலோ அல்லது கையில் உள்ள தண்டத்தினாலோ அறியப்படுபவன் அல்ல. ஒருவர் அணியும் ஆடைகளோ, அவர் நாவிலிருந்து வரும் சொற்களோ ஒருவர் ஒழுக்கமுடையவரா இல்லையா என்று முடிவு செய்வதில்லை; அவரது நடவடிக்கையே அதை முடிவு செய்கிறது. விலங்குகளுக்குக் கூட நல்லவர்களாக இருக்கும் திறன் உள்ளது. எங்கும்,எவரிடத்திலும் நற்குணங்களைப் பேணிக்காப்பதே இந்த உலகின் நலத்தை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும்.