azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

What exactly do people mean when they say the Sun has risen or that it has set? It is so far as their vision is concerned; that is all, is it not? The Sun does not rise or set. The incarnation of God is also like that. In the Geetha, Krishna said: “I am not born, nor do I die. Men of ordinary intellect consider that I am born many times and that I do many deeds during each birth. Whenever there is a need for the uplift of the world, I become manifest, assuming a name and form, that is all. So I am conscious of all My appearances, all My manifestations. I am almighty, I am Sarvajna (all knowing). Not only I, even you know everything. But your Jnana (wisdom) is overwhelmed by ajnana (ignorance). I am Jnana itself. I remain as almighty and as Sarvajna as ever. I am birthless, immortal”.(Geeta Vahini, Ch 7)
சூரியன் உதித்து விட்டான் இல்லை மறைந்து விட்டான் என்று மனிதர்கள் கூறும்போது என்ன அர்த்தத்தில் சொல்கிறார்கள்? அவர்களது பார்வையைப் பொறுத்தே, அவ்வளவு தான் அல்லவா? சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை.இறைவனின் அவதாரமும் அப்படிப் பட்டதே. ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், '' நான் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.சாதாரண புத்தி கொண்ட மனிதர்கள் நான் பல முறை பிறந்து, ஒவ்வொரு பிறவியிலும் பல காரியங்களைச் செய்கிறேன் என்று கருதுகிறார்கள். எப்போதெல்லாம் உலகை உய்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒரு நாம,ரூபம் ஏற்று தோன்றுகிறேன், அவ்வளவு தான். நான் என்னுடைய எல்லாத் தோற்றங்களையும், உருவகங்களையும் அறிவேன். நான் ஸர்வ வல்லமை கொண்டவன், அனைத்தும் அறிந்தவன். நான் மட்டும் அல்ல, நீ கூட அனைத்தும் அறிந்தவனே. ஆனால் உனது ஞானத்தை அஞ்ஞானம் ஆளுமை கொண்டிருக்கிறது. நானே ஞானம். நான் எப்போதும் ஸர்வ வல்லமை கொண்டவனாகவும், அனைத்தும் அறிந்தவனாகவும் உள்ளேன். நான் பிறப்பற்றவன், அமரத்துவம் கொண்டவன் ''