azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You are pure and indestructible; you are beyond the ups and downs of life; you are the true, the eternal, the unchanging Brahmam (Divine Self). A mere five-minute inquiry will convince you that you are not the body, the senses, the mind or the intelligence, the name or the form; but that you are the Aatma Itself - the same Aatma that appears as all this variety. Once you get a glimpse of this truth, hold on to it; do not allow it to slip. Make it your permanent possession. Look upon all with love, respect and faith in their sincerity. Treat your servants kindly. Do not entertain hatred or contempt in your heart. Repent for the errors that you commit and decide never to repeat them; pray for strength to carry out your resolutions. Do not find fault with others. Purify your heart by being good to all (Divine Discourse, Jan 30, 1965)
நீங்கள் தூய்மையானவர்கள்,அழிவற்றவர்கள்;வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்;நீங்களே உண்மையான, என்றும் நிலைத்து நிற்கும், மாறாத பரம்பிரம்மம். வெறும் ஒரு ஐந்து நிமிட ஆய்வு, நீங்கள் உடலோ,புலன்களோ,மனமோ அல்லது புத்தியோ,உருவமோ,பெயரோ அல்ல,ஆனால் அனைத்திலும் பல்வேறாகத் தோன்றும் அதே ஆத்மா தான் நீங்கள் என்பது உங்களுக்குத் தெளிவாகும். இந்த சத்தியத்தின் ஒரு கண நேரக் காட்சி கிடைத்தவுடன் அதைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அதை கை நழுவ விட்டு விடாதீர்கள். அதை உங்களது நிலையான சொத்தாக ஆக்கிக் கொள்ளுங்கள். அனைவரையும் அன்பு, மரியாதை மற்றும் அவர்களது நேர்மையில் நம்பிக்கை ஆகியவற்றுடன் நோக்குங்கள். உங்களது வேலைக்காரர்களை கனிவுடன் நடத்துங்கள்.இதயத்தில் வெறுப்பு அல்லது ஏளனத்திற்கு இடம் அளிக்காதீர்கள். நீங்கள் புரிந்த தவறுகளுக்காக வருந்தி, அவற்றை இனி ஒருபோதும் திரும்பச் செய்யமாட்டோம் என முடிவு எடுங்கள்;இந்த முடிகளின் படி நடப்பதற்கான சக்திக்காக இறைவனைப் பிரார்த்தியுங்கள்.மற்றவர்களிடம் குறை காணாதீர்கள். அனைவரிடம் நல்லவிதமாக நடந்து உங்கள் இதயத்தைத் தூய்மைப் படுத்திக் கொள்ளுங்கள்.