azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

If Arjuna was an individual like others, he could not have been an effective instrument, a recipient and transmitter of great teachings. He is a hero who has defeated not merely the outer foes, but even the inner ones. Weak hearts cannot grasp the Geetha and put it into practice. It is with this full knowledge that Krishna selected Arjuna and showered on him His overpowering grace. Once Krishna said: "Arjuna, you are My closest Bhaktha (devotee); you are also My dearest friend. That is the reason why I taught you this supreme, secret teaching." Reflect on this! To get the title from the Lord Himself is the highest credential and good fortune, which reflects how pure-hearted and deserving Arjuna was. Bhakthi (devotion) must be won by implicit obedience. But being a devotee alone is not sufficient. Hence Krishna uses the word mithra (friend). The friend has no fear; that makes him a more perfect recipient.(Geeta Vahini, Ch 7)
அர்ஜூனன் மற்றவர்களைப் போல ஒரு சாதாரண மனிதனாக இருந்திருந்தால், அவன் ஒரு திறனார்ந்த கருவியாக, உயர்ந்த போதனைகளை ஏற்று அவற்றைப் பரப்புபவராக இருந்திருக்க முடியாது. வெளிப்படையான எதிரிகளை மட்டுமல்லாது, உள்ளார்ந்த எதிரிகளையும் வென்ற மாவீரன் அவன். பலஹீனமான இதயங்களால் ஸ்ரீமத் பகவத் கீதையைப் புரிந்து கொண்டு அதை நடைமுறைப் படுத்த முடியாது. முழுவதுமாக அறிந்தே ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜூனனைத் தேர்ந்தெடுத்து, அவன் மீது அளவற்ற அருளைப் பொழிந்தார். ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணர், ''அர்ஜூனா ! நீ எனது மிகவும் நெருங்கிய பக்தன்; நீ எனக்கு மிகவும் பிரியமான நண்பனும் கூட. இந்தக் காரணத்தால் தான் உனக்கு இந்த ஒப்புயர்வற்ற, ரகசியமான போதனையைக் கற்றுக் கொடுத்துள்ளேன்'' என்று கூறுகிறார். இதை சிந்தித்துப் பாருங்கள் ! இறைவனிடமிருந்தே இப்படிப்பட்ட பட்டத்தைப் பெறுவது மிகவும் தலை சிறந்தது மற்றும் நல்ல அதிர்ஷ்டமும் ஆகும்; அதுவே அர்ஜூனன் எப்படிப்பட்ட தூய இதயம் கொண்டவன் என்பதையும் இதற்கு எவ்வளவு தகுதியானவன் என்பதையும் காட்டுகிறது. பக்தியை , ஐயமற்ற பணிவுடமையினால் தான் அடைய வேண்டும். ஆனால், பக்தனாக மட்டும் இருந்தால் போதாது. எனவேதான் ஸ்ரீ கிருஷ்ணர், '' மித்ரன் ( நண்பன்) '' என்ற பதத்தையும் உபயோகப் படுத்துகிறார். நண்பன் எனும் போது அவருக்கு பயம் இருப்பதில்லை; இதுவே அவரை (ஸ்ரீமத் பகவத் கீதையைப் பெறுவதற்கு) மேலும் தகுதி உள்ளவராக ஆக்குகிறது.