azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

From the reign of adharma (unrighteousness), the world has to enter the era of Dharma (righteousness). Special effort is called for when you cultivate a crop; no effort is necessary when weeds and wild grass are allowed to grow. The valuable crop of Sahajadharma (innate righteousness) has to be cultivated with all care and attention. When Dharma is practised, adharma will decline by itself. No special exertion is needed for its removal. Dharma, since it is associated with truth, is indestructible. To make the Dharma that has become hidden, visible once again, its practice must be intensified. That is Dharmasthaapana (establishing righteousness). Using Arjuna as an instrument, Lord Krishna brought to light the codes of conduct and modes of thought which were laid down from the very beginning and revived their practice. This is not work that can be carried out by ordinary men. So the universal Lord Himself assumed the task and instructed the world through Arjuna.(Geeta Vahini, Ch 7)
அதர்மத்தின் ஆட்சியிலிருந்து உலகம் தர்மத்தின் சகாப்தத்திற்குள் நுழைய வேண்டும். ஒரு பயிரை வளர்ப்பதற்கு தனிப்பட்ட முயற்சி தேவை; களைகளும்,புதர்களும் வளர விடுவதற்கு எந்த விதமான முயற்சியும் தேவையில்லை. விலைமதிப்பற்ற சகஜ (இயற்கையான) தர்மத்தை, அனைத்து கவனம் மற்றும் அக்கறையுடன் வளர்க்க வேண்டும். தர்மத்தைக் கடைப்பிடித்தால் அதர்மம் தானாகவே குறைந்து விடும்.அதை நீக்குவதற்கு தனிப்பட்ட கடும் முயற்சி தேவை இல்லை. தர்மம் சத்தியத்துடன் இணைந்திருப்பதால், அது அழிக்க முடியாதது. மறைந்து நிற்கின்ற தர்மத்தை,மறுபடியும் வெளியில் தெரியுமாறு செய்வதற்கு, அதைக் கடைப்பிடிப்பதைத் தீவிரமாக்க வேண்டும். அதுவே தர்மத்தை நிலைநிறுத்துவது (தர்மஸ்தாபனம்) ஆகும். அர்ஜூனனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஆதியிலிருந்தே வரையறுக்கப் பட்டிருந்த வாழ்க்கை நெறிகள் மற்றும் சீரிய சிந்தனைகளை வெளிக் கொணர்ந்து, அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு புத்துயிர் அளித்தார். இது சாதாரண மனிதர்களால் செய்யப் படக்கூடிய காரியம் இல்லை. எனவேதான் பிரபஞ்ச நாயகனாகிய இறைவன்,தானே அந்தப் பொறுப்பை ஏற்று, அர்ஜூனன் மூலமாக உலகிற்கு அறிவுறுத்தினார்.