azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Persist in your Sadhana (spiritual discipline) till you reach the goal. Once the walls are completely built, the scaffolding is removed; so too, when the vision of Reality is attained, the various forms of Sadhana (like meditation, contemplation, worship, devotional singing, etc.) adopted by you can be dispensed with. Congenial company is most necessary for you to persist in your Sadhana. You will be shaped by the company you keep; you will be fouled by the foul thoughts of the people among whom you move. So be ever vigilant of the company you keep; the pure water that falls as rain from the sky is changed into a hundred tastes and colours by the soil on which it falls. Be alert! You must also look out for every chance to dwell on noble thoughts, do elevating tasks and curb the downward pull of the ego.(Divine Discourse, Jan 30, 1965.)
உங்களது ஆன்மீக சாதனையை, குறிக்கோளை எட்டும் வரைத் தொடர்ந்து செய்யுங்கள். சுவர்கள் முழுமையாகக் கட்டி முடிக்கப் பட்டபின்,சாரங்கள் கலைக்கப் பட்டு விடும்; அதைப் போலவே, நீங்கள் கடைப்பிடிக்கும் தியானம், சிந்தனை, வழிபாடுகள், நாமஸ்மரணை போன்ற பல விதமான ஆன்மீக சாதனைகளை, ஆத்ம சாக்ஷாத்காரம் பெற்றவுடன் விட்டு விடலாம்.உங்கள் சாதனையைத் தொடர்ந்து செய்வதற்கு ஸத்ஸங்கம் மிகவும் இன்றிமையாத ஒன்று. நீங்கள் வைத்துக் கொள்ளும் நட்பு வட்டம் உங்களை உருவாக்குகிறது; உங்களது நட்பு வட்டத்தில் உங்களுடன் பழகுவோரின் தீய எண்ணங்களால், நீங்களும் கெட்டுப் போகிறீர்கள்.எனவே, நீங்கள் உறவு வைத்துக் கொள்ளும் நண்பர் குழுவைப் பற்றி கவனமாக இருங்கள்; ஆகாயத்திலிருந்து விழும் தூய்மையான மழை நீர், தான் விழும் நிலத்தைப் பொறுத்து, பல சுவை கொண்டதாகவும், பல நிறங்களை உடையதாகவும் மாறுகிறது. கவனத்துடன் இருங்கள்! சீரிய சிந்தனைகளை எண்ணுவதற்கும்,உயரிய செயல்களை ஆற்றுவதற்கும் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் எதிர்நோக்கி, நம்மை கீழே விழ வைக்கும் அஹங்காரத்தின் சக்தியை கட்டுப் படுத்த வேண்டும்.