azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The One God is the inner motivator (Sarvaantharyaami) of all beings. If He is within all, why is He not visible to all, you may ask. Let me give you an example. Picture a rosary of different types of beads: coral, pearl, tulasi, rudraaksha, crystal, conch, etc. The string passes through each rosary and holds all the beads together but it is visible only in the transparent beads. So too, you have to make yourself transparent, free from wish and will, that hide and befogs the Lord Within. Then you can see the Inner Motivator. To earn this transparency, purity of intention, impulse and instinct is essential. You can achieve it by systematic and sincere spiritual discipline. A ladder has to be as tall as the height you want to reach. So too, your spiritual practices (sadhana) has to be pursued till you experience Him.(Divine Discourse, Jan 30, 1965)
அந்த ஒரு இறைவனே அனைத்து ஜீவராசிகளின் உள்ளும் இருந்து இயக்குபவன். அவன் அனைத்துள்ளுள் இருக்கிறான் என்றால் ஏன் அனைவரின் கண்களுக்கும் தெரிவதில்லை என்று நீங்கள் கேட்கலாம். பவழம், முத்து,துளசி, ருத்ராக்ஷம், படிகம்,சங்கு போன்ற பல மணிகளால் ஆன ஒரு ஜெபமாலையை எடுத்துக் கொள்ளுங்கள். இவை ஒவ்வொன்றிலும் ஊடுருவிச் சென்று நூல் கயிறு அவற்றை ஒன்றாக இணைக்கிறது; ஆனால் ,தெளிவான மணிகளில் மட்டும் தான் அதை வெளிப்படையாகக் காண முடியும். அதைப் போலவே, நீங்களும், உள்ளுறையும் இறைவனை ஒளித்து வைத்து பார்வையை மறைக்கும் ஆசாபாசங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு,ஒளிவு மறைவற்ற தெளிந்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னரே உள்ளார்ந்து இயக்கும் இறைவனை நீங்கள் காண முடியும்.இப்படிப்பட்ட தெளிந்த நிலையைப் பெறுவதற்கு, நோக்கம்,உணர்ச்சி வேகம் மற்றும் சுபாவங்களின் தூய்மை மிகவும் அவசியம். இதை முறையான மற்றும் மனமார்ந்த ஆன்மீகப் பயிற்சிகளின் மூலம் நீங்கள் பெற முடியும். ஒரு ஏணி நீங்கள் எவ்வளவு உயரம் ஏற விரும்புகிறீர்களோ அவ்வளவு உயரம் இருக்க வேண்டும். அதைப் போலவே, உங்களது ஆன்மீக சாதனைகளை அந்த இறைவனை உணரும் வரை தொடர்ந்து செய்தல் வேண்டும்.