azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Right Conduct (Dharma) is the quality which makes a human out of an animal. This Sahajadharma (natural conduct) of human beings has been overpowered in course of time; those who supported and encouraged it, and derived joy from it have declined in numbers. This is akin to the weed overpowering the crop. So the 'establishment of Dharma' is a matter of weeding of the field! In this iron age (Kaliyuga), Dharma has been reduced to mere words. Dharma is not manipulation of words. "Sathyam Vada, Dharmam Chara" (Speak Truth and Practice Righteousness) - has been the clarion call of the Upanishads, the repositories of Indian culture. However in the present times, "Dharmam vada," (Speak about Right Conduct) has become the order of the day! That is the first step in the decline of Dharma! Know that that which is not practised cannot possess strength. Understand this truth and practise Dharma in your lives.(Geetha Vahini, Ch 7.)
நன்னடத்தை (தர்மம் ) என்ற குணமே மனிதனை விலங்கிலிருந்து பிரித்துக் காட்டுகிறது. இந்த மனிதர்களின் சகஜ தர்மம்( இயற்கையான குணம்) காலப் போக்கில் வீழ்ச்சி அடைந்து விட்டது; இதனைப் பேணிப் போற்றி, அதிலிருந்து ஆனந்தம் அடைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. களையானது பயிரையே அழித்து விட்டதற்கு ஒப்பானது இது. எனவே தர்மத்தை நிலை நாட்டுவது என்பது நிலத்திலிருக்கும் களைகளை நீக்குவது போன்றதே! இந்தக் கலி யுகத்தில் தர்மம் வெறும் வார்த்தைகள் அளவிற்குக் குறுகிவிட்டது. தர்மம் என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. இந்தியக் கலாசாரத்தின் பொக்கிக்ஷங்களான உபநிக்ஷதங்கள்,'' உண்மையே பேசு, தர்மத்தைக் கடைப்பிடி '' என்று அறை கூவுகின்றன. ஆனால் தற்காலத்தில் '' தர்மம் வத'' (அதாவது தர்மத்தைப் பேச்சளவில் வையுங்கள்) என்பது வழக்கமாகி விட்டது. அதுதான் தர்மம் வீழ்ச்சி அடைவதற்கான முதல் படி! எதை நாம் கடைப்பிடிக்கவில்லையோ, அதற்கு வலு கிடையாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.இந்த உண்மையைப் புரிந்து கொண்டு, தர்மத்தைக் கடைப் பிடியுங்கள்.