azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 20 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 20 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You should cultivate an attitude of inseparable attachment to the Lord, Who is your very Self. If He be a flower, consider yourself a bee that savours its honey; if He is a tree, be a creeper that clings to it; if a cliff, then feel that you are a cascade running over it; if He is the sky, be a tiny star that twinkles in it. Above all, be conscious of the truth that you and He are bound by Supreme Love. If you feel this acutely, with subtle intelligence, then the journey will be quick and the goal can be achieved. There is a difference between subtle and gross intelligence. Sthula buddhi (external knowledge or gross intelligence) keeps you walking, but the subtle intelligence will make you fly to your destination. The gross is too much tied to body consciousness where as the subtle transcends the body and will lighten your burden.(Divine Discourse, Jan 30, 1965.)
உங்களது உண்மை ஸ்வரூபமான இறைவனுடன் இணை பிரிக்க முடியாத மனப்பாங்கை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவன் மலரானால்,நீங்கள் அதன் மதுவை அருந்தும் தேனியாக இருங்கள்;அவன் மரமானால்,நீங்கள் அதைச் சுற்றிப் படரும் கொடியாக இருங்கள்; அவன் மலையானால், நீங்கள் அதன் மீதிலிருந்து விழும் நீர்விழுச்சியாக இருங்கள்; அவன் ஆகாயமானால்,நீங்கள் அதில் ஒளி விடும் சிறு விண்மீனாக இருங்கள். அனைத்திற்கும் மேலாக நீங்களும் அவனும் தலைசிறந்த ப்ரேமையால் கட்டுண்டவர்கள் என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இருங்கள்.இதை நீங்கள் உங்களது சூக்ஷம புத்தியால், தீர்க்கமாக அனுபவித்தீர்களானால், உங்களது பயணம் விரைவாக அதன் இலக்கை அடைய முடியும். ஸ்தூல புத்திக்கும், சூக்ஷம புத்திக்கும் வித்தியாசம் உண்டு. வெளி உலகிலான ஸ்தூல புத்தி உங்களை நடத்தி அழைத்துச் செல்லும் என்றால், சூக்ஷம புத்தி உங்களை அதன் இலக்கிற்குப் பறந்து எடுத்துச் செல்லும். ஸ்தூல புத்தி, உடல் உணர்வோடு மிக அதிகமாக கட்டுண்டு இருக்கிறது, ஆனால் சூக்ஷம புத்தியோ உடலுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் உங்கள் சுமையைக் குறைக்கிறது.