azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 19 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 19 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Take the five elements, the components of this Prapancha (Universe). Of these, water has movement and coldness as its Dharma; combustion and light are the Dharma of fire. Each of the five elements have their unique Dharma. Humanity for man and animality for animals - these guard them from decline. How can fire be fire, if it has no power of combustion and light? It must manifest the Dharma to be itself. When it loses that, it becomes as lifeless as a piece of charcoal. Similarly man too has some natural characteristics that are his very life-breath; one can be identified as 'human' only when these abilities are present. To preserve and foster such qualities and abilities, certain modes of behaviour and lines of thought are laid down. This is called Dharma. These qualities are not imported from somewhere outside, nor can it be removed. It is your own genuine nature, your uniqueness.(Geeta Vahini, Ch 7)
இந்தப் பிரபஞ்சத்தின் கூறுகளான பஞ்சபூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றில் தண்ணீருக்கு அசைவு இருக்கிறது; குளுமை அதன் தர்மம். எரியும் தன்மையும், வெளிச்சமும் நெருப்பின் தர்மங்கள். ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்குத் தனிப்பட்ட தர்மம் உள்ளது. மனிதப் பண்புகள் மனிதனையும், மிருக குணங்கள் மிருகங்களையும் தங்கள் நிலையிலிருந்து வீழ்ச்சி அடையாமல் காக்கின்றன. எரியும் தன்மை, வெளிச்சம் என்ற சக்திகள் இல்லாமல், நெருப்பு, நெருப்பாக இருக்க முடியுமா? அது தனது தனித்தன்மையோடு இருப்பதற்கு தனது தர்மத்தை வெளிப் படுத்த வேண்டும். அதை இழக்கும் போது, அது ஒரு கரிக் கட்டையைப் போல பயனற்றதாகி விடுகிறது. அதைப் போலவே மனிதனுக்கும் அவனது உயிர் மூச்சைப் போன்ற சில இயற்கையான குணாதிசயங்கள் உள்ளன; இந்தத் திறன்கள் இருந்தால் மட்டுமே, ஒருவனை ' மனிதன் ' என அடையாளம் கண்டு கொள்ள முடியும்.இப்படிப்பட்ட முணங்கள் மற்றும் திறன்களைப் பேணிக் காப்பதற்கு,நடத்தைகளுக்கான சில கோட்பாடுகளும், எண்ணங்களுக்கான முறைகளும் வரையறுக்கப் பட்டுள்ளன. இதுவே தர்மம் எனப்படுகிறது. இந்த குண நலன்கள் எங்கோ வெளியிலிருந்து தருவிக்கப் பட்டவையோ, அல்லது நீக்கப் படக் கூடியவையோ அல்ல. அது உங்களது மெய்யான இயல்பு; உங்களது தனித்தன்மை ஆகும்.