azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 18 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 18 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

All the fear, anxiety, cruelty and injustice that is injuring the world today is caused by the wrong type of material education. Even those who promise to cure the disease of the body, treat it as if its different parts are fit subjects for a separate study and treatment. All nature is the body of God and must be looked upon as One. Spiritual education draws attention to the unity behind all the apparent multiplicity. To celebrate an occasion or a festival, you may have dusted and cleaned your houses and their surroundings, painted and whitewashed the walls, drawn auspicious designs on the floor or put floral wreaths over your doors - all this is simply outer decoration. To be truly happy, you must decide to remove the evils of egoism, greed, hatred and jealousy within you. Then you will truly become aware of the light within you, and the Atma (Supreme Soul) will dawn on you in all its glory.(Divine Discourse, Jan 15, 1979.)
இன்று உலகைப் பாதிக்கு பயம்,கவலை, கொடுமை மற்றும் அநீதி அனைத்தும் தவறான உலகியலான கல்வியால் ஏற்படுகின்றன. உடலின் வியாதியைக் குணப்படுத்துவோம் என்று உத்திரவாதம் அளிப்பவர்களே, அதனது பல அங்கங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டு, சிகிச்சை அளிக்கப் பட வேண்டியவை எனக் கருதுகின்றனர். இயற்கை அனைத்தும் இறைவனது தேகமே;அதை ஒன்றாகவே காண வேண்டும். ஆன்மீகக் கல்வி வெளித்தோற்றத்தில் வேற்றுமையாகத் தோன்றுகின்ற அனைத்தின் பின் உள்ள ஒற்றுமையின் பால் நம் கவனத்தை ஈர்க்கிறது.ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, நீங்கள் உங்கள் வீடு மற்றும் சுற்றுப் புறத்தை துடைத்து,தூய்மைப் படுத்தி, சுவர்களுக்கு வெள்ளை அடித்து, தரைகளில் கோலமிட்டு, வாயில்களில் தோரணங்கள் கட்டியிருக்கலாம்; இவை அனைத்தும் வெறும் வெளிப்புறமான அலங்காரங்களே. உண்மையிலேயே ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றால், உங்களுள் உள்ள அஹங்காரம், பேராசை,வெறுப்பு,பொறாமை என்ற தீய குணங்களை நீக்க முடிவு செய்ய வேண்டும். பிறகு,நீங்கள் உங்களுள் உள்ள பேரோளியை உணர்வீர்கள்;ஆத்மா அதன் அனைத்துச் சிறப்புடனும் உங்களுள் உதயமாகும்.