azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Think about this: when you are well, no one inquires about your health. But if you are struck with illness or sorrow, you are bombarded with anxious queries. Why this anxiety? Because man’s fundamental nature is to be happy and healthy. Your nature is joy. So when you are happy and healthy, no one is surprised or worried. Grief and sorrow are unnatural, and are the result of a delusion that has overwhelmed one’s nature. If you do a task as an assumed duty, you will find it difficult to put up with the troubles and travails that may come along with it. The task will also induce conceit, or the feeling 'I am the doer’, resulting in exhaustion or elation, disgust or pride. On the other hand when karma (action) is performed as your nature you can have fortitude.(Geeta Vahini, Ch 6.)
யோசித்துப் பாருங்கள்:நீங்கள் நன்றாக இருக்கும் போது, யாரும் உங்கள் உடல் நலத்தைப் பற்றி விசாரிப்பதில்லை. ஆனால் ,நீங்கள் வியாதியாலோ,துக்கத்தாலோ பீடிக்கப் பட்டால், உங்கள் மீது கவலையான பல கேள்விக் கணைகள் தொடுக்கப் படுகின்றன. ஏன் இந்தக் கலக்கம்? ஏனென்றால் மனிதனின் அடிப்படையான இயல்பு சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் இருப்பதே. உங்களது இயல்பு ஆனந்தமே.எனவே, நீங்கள் ஆனந்தமாகவும் , ஆரோக்யமாகவும் இருக்கும்போது எவரும் ஆச்சரியமோ, கவலையோ படுவதில்லை. துயரமும், துக்கமும் இயற்கைக்கு மாறானது;ஒருவரது இயல்பான தன்மை,மாயையினால் சூழப்படுவதால் ஏற்படும் விளைவாகும். நீங்கள் ஒரு வேலையை, கடனே என்று கருதி ஆற்றினீர்களானால், அதனுடன் கூட வருகின்ற இடர்களையும், இன்னல்களையும் ஏற்றுக் கொள்வது கடினமான ஒன்றாகி விடுகிறது. அப்படிப் பட்ட வேலை, ' நான் தான் செய்கிறேன்' என்ற எண்ணம் அல்லது இறுமாப்பைத் தூண்டி , ஆயாசம் அல்லது இறுமாப்பு,வெறுப்பு அல்லது கர்வத்தில் முடிகிறது. அதே சமயம் கர்மாவை உங்களது இயல்பாகக் கருதிச் செய்யும்போது,நீங்கள் மனவலிமை பெறுகிறீர்கள்.