azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 12 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 12 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The whole world is intimately associated with the Sun God. He is the visible manifestation of the Lord. In India, Sun God (Surya) is considered highly sacred and granted the unique status of a great Guru. Sun is also the source of time. The Sun limits and regulates the number of years each one lives. He performs His duty without thought of reward, and is humble and steady. Imagine the patience with which the Sun puts up with all that extreme heat, and gives sufficient warmth to the human body, every single day. Human beings are so full of activity and intelligence on account of the solar energy that is imbibed. If the Sun is idle even for a moment, the whole world will go cold and dark. The actions of the great is the ideal that the rest have to keep in view. This also shows that all in the world are bound by the obligation of karma (activity).(Geeta Vahini, Ch 6)
இந்த உலகனைத்தும் சூரிய பகவானுடன் நெருக்கமாக சம்பந்தப் பட்டுள்ளது. அவன் நாம் கண்கூடாகப் காணக்கூடிய இறைவனின் ஸ்வரூபமாகும். இந்தியாவில் சூரிய பகவான் மிகவும் புனிதமானராக்க் கருதப்படுவதோடு,அவருக்கு தலை சிறந்த குரு என்ற ஸ்தானமும் அளிக்கப் பட்டுள்ளது. சூரியன் காலத்தின் மூலமும் ஆவார். சூரியன் ஒவ்வொருவரும் வாழுகின்ற ஆண்டுகளை வரையறுத்து, அவற்றை முறைப் படுத்துகிறார். எந்தப் பலனையும் எதிர்பாராது அவர் தனது கடமையை ஆற்றுகிறார்; அவர் பணிவும் ,நிலையான தன்மையும் கொண்டவர். எவ்வளவு பொறுமையுடன் அந்தக் கடுமையான வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் மனித உடம்பிற்குத் தேவையான அளவு உஷ்ணத்தை அவர் அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தாங்கள் உள் ஏற்றுக் கொள்ளும் சூரிய சக்தியானால் தான் மனிதர்கள் முழுமையான செயலாற்றும் திறனும்,புத்தியும் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். சூரியன் ஒரு நொடிப் பொழுது செயலிழந்து விட்டாலும்,இந்த உலகனைத்தும் குளிர்ந்தும் இருண்டும் போய் விடும். ஆன்றோர்களின் பணிகளை மற்றவர்கள் உயர் இலட்சியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். உலகில் உள்ள அனைவரும் கர்மாவினால் கட்டுண்டவர்களே என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.