azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The impressions of the senses, mind, and intelligence have nothing to do with the Atma (Divine Self), which you really are. The Atma is unaffected by any subject or object or pleasures. To know the Atma as such an entity, unaffected and unattached, is the secret of Jnana (Wisdom). This awareness will guide you in both the outward (Pravritti marga) and inward (Nivritti marga) paths. This knowledge will not block action but will fill it with purpose and meaning. It will build up faith, inspire a moral life and take man to the realm of deliverance along the road of Nishkama Karma, action that is not prompted by desires. For the achievement of liberation, Jnana is the direct road. Therefore, it is incomparably sacred. And naturally, it follows that ignorance is undoubtedly the most despicable. "See the Universal in the particular; see the particular in the Universal; that is the essence of Jnana," declared Krishna in the Geeta. (Geeta Vahini, Ch 6.)
புலன்கள்,மனம் , மற்றும் புத்தி ஆகியவற்றில் ஏற்படும் கருத்துப் பதிப்புகளுக்கு உங்களது நிஜத் தன்மையாகிய ஆத்மாவுடன் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆத்மா எந்த விஷயத்தாலோ,பொருளாலோ,இன்பங்களாலோ பாதிக்கப் படுவதில்லை. இப்படி பாதிப்போ, பற்றோ அற்ற ஒன்றாக ஆத்மாவை உணருவதே ஞானத்தின் ரகசியமாகும். இந்த உணர்வு நிலை, வெளி உலகைச் சார்ந்த( ப்ரவிருத்தி ) மற்றும் உள்ளார்ந்த (நிவ்ருத்தி ) என்ற இரண்டு பாதைகளிலும் உங்களுக்கு வழி காட்டும்.இந்த அறிவு கர்மாவைத் தடை செய்யாது, அதற்கு ஒரு குறிக்கோளையும்,அர்த்தத்தையும் அளிக்கும். நம்பிக்கையை வளர்த்து,ஒழுக்கமான வாழ்க்கைக்கு எழுச்சி அளித்து,ஆசைகளால் தூண்டப் படாத ( நிஷ்காம) கர்மா என்ற பாதை வழியாக மோக்ஷம் என்னும் நிலைக்கு மனிதனை இட்டுச் செல்லும். மோக்ஷத்தை அடைவதற்கு ஞானமே நேரான பாதை. எனவேதான் அது ஒப்பற்ற புனிதத்தன்மை வாய்ந்தது. இதிலிருந்து, ( ஞானத்திற்கு நேர்மாறான ) அறியாமை என்பது மிகவும் வெறுக்கத் தக்க ஒன்று என்றாகிறது. '' பிரம்மாண்டத்தை அணுவில் காணுங்கள்; அணுவில் பிரம்மாண்டத்தைக் காணுங்கள்; இதுவே ஞானத்தின் சாரமாகும் '' என்று பறை சாற்றுகிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமத் பகவத் கீதையில்.