azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 08 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 08 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Everyone has to do action (Karma); if not the world itself will come to a nought. Everyone in the world is bound by the obligation of Karma. Wisdom (Jnana) is the final goal and gain of all Karma; wisdom is the treasure won by one's efforts to purify the mind and to earn the grace of God. What is this wisdom? Through wisdom, you experience that God is present in everyone and everywhere. All are in you, you are in all. You must get this conviction fixed in your consciousness, by means of analysis, discrimination and intellectual exploration. Isolate and dismiss from your consciousness the impressions of the senses, the mind, the intelligence, etc. You must carry out every single act of yours with this wisdom (Jnana) as its background and conviction.(Geeta Vahini, Ch 6)
ஒவ்வொருவரும் கர்மா செய்தே ஆக வேண்டும்; இல்லை எனில் இந்த உலகமே ஒன்றுமில்லை என ஆகி விடும். இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் கர்மா என்ற கடமையினால் கட்டுண்டவரே. ஞானமே இறுதியான இலக்கும்,அனைத்து கர்மாவின் பயனும் ஆகும்; ஞானம் என்பது மனதைத் தூய்மைப் படுத்தி இறைவனது அருளைப் பெறுவதற்கான ஒருவரது முயற்சிகளால் அடையப்படும் பொக்கிஷமாகும். இந்த ஞானம் என்பது என்ன? ஞானத்தின் மூலம் எங்கும் எவரிலும் இறைவன் இருக்கிறான் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். அனைத்தும் உங்களில் உள்ளன, நீங்களும் அனைத்திலும் இருக்கிறீர்கள். ஆய்வு, பகுத்தறிதல் மற்றும் புத்தி கூர்மையால் தேடுதல் மூலம்,இந்த திட நம்பிக்கையை நீங்கள் கண்டிப்பாக உங்கள் உணர்வு நிலையில் நிலை நிறுத்த வேண்டும். புலன்கள், மனம்,புத்தி இவற்றால் உணர்வு நிலையில் ஏற்படுகின்ற கருத்துப் பதிவுகளை தனிமைப் படுத்தி, நீக்கி விடுங்கள். ஞானத்தை பிண்ணனியாகவும்,திட நம்பிக்கையாகவும் கொண்டு உங்களது ஒவ்வொரு செயலையும் நீங்கள் ஆற்ற வேண்டும்.