azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 07 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 07 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

What greater misfortune can there be than to cavil at others' faults and to be blind to one's own; to jeer at others' looks, not noticing one's own ugliness? To have such qualities from birth - can there be a greater sin than this? Is this culture? Embodiments of love! The observance of morality in daily life, the divinisation of all actions and thoughts, and adherence to ideals - all these together constitute culture. Students today do not make the requisite efforts to understand the sacredness and value of this culture. Samskrit, Samskriti, Samskara are all terms which have been derived from the roots, Sam and Krit. Bharatiya Samskriti (Indian culture) is a composite of purity, divinity, sublimity and beauty; not of narrow-minded ideas and ideals. "Lokaa samasthaas-sukhino bhavanthu!" (May all beings everywhere be happy) is the benedictory motto of our sacred culture.(Divine Discourse, Jan 14 1990.)
தங்களது குறைகளைக் காணாது,மற்றவர்களது குறைகளின் மீது அற்பமான ஆட்சேபனை செய்வது,தனது அவலக்ஷணத்தைக் காணாது, மற்றவர்களது தோற்றத்தை இகழ்வது போன்றவற்றை விடப் பெரிய துரதிருஷ்டம் என்ன இருக்க முடியும்? பிறவியிலிருந்தே இப்படிப் பட்ட குணங்களைக் கொண்டிருப்பது என்றால், அதை விடப் பெரிய பாவம் என்ன இருக்க முடியும்? இதுதான் கலாசாரமா? அன்பின் வடிவங்களே! தினசரி வாழ்க்கையில் ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பது, அனைத்து எண்ணங்கள் மற்றும் செயல்களை தெய்வீகமாக்குவது மற்றும் உயரிய இலட்சியங்ளைப் பற்றி நடப்பது என்ற இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தான் கலாசாரத்தை உருவாக்குகின்றன. மாணவர்கள் இன்று, இந்த கலாசாரத்தின் புனிதத்தன்மை மற்றும் மதிப்பைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதில்லை. ஸம்ஸ்கிரிட்,ஸம்ஸ்கிருதி, ஸம்ஸ்காரா போன்ற அனைத்து வார்த்தைகளும், 'ஸம்', 'க்ரிட்' என்ற மூல வார்த்தைகளிலிருந்து உருவாக்கப் பட்டவையே. பாரத கலாசாரம் என்பது,தூய்மை,தெய்வீகம், மாட்சிமை மற்றும் சுந்தரம் ஆகியவை ஒன்றிணைந்ததாகும்; குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்கள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டதல்ல. '' லோகாஸ் ஸமஸ்தாஸ் ஸூகினோபவந்து '' ( அனைத்து ஜீவராசிகளும் நலமுடன் இருக்கட்டும் ) என்பதே நமது புனிதமான கலாசாரத்தின் ஆசி கூறும் குறிக்கோளாகும்.