azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 06 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 06 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Does the airplane stay on above, denouncing the earth below? Those who have earned the right to travel in it cannot fly towards it! Therefore, to take them in, it has to come down at the places where they gather by previous arrangement, and then soar into the sky with them. So too, the spiritually evolved (Jnanis) who have no desire or urge to do Karma, come down and help those who would not make progress otherwise. The right way to perform action is to identify every aspect of the universe with the Universal Being and dedicate all acts unto Him. Always remember that one who is bound by the Deha-atma buddhi (the false idea that he is just this body and nothing more) can never win the game of life; one must acquire the Brahma-Atma-Buddhi (the awareness that he is Divine) to be sure of victory.(Geetha Vahini, Ch 6.)
கீழே இருக்கும் பூமியை உதாசீனப்படுத்தி விட்டு,ஆகாய விமானம் வானத்திலேயே இருக்க முடியுமா? அதில் பயணம் செய்வதற்கான உரிமை பெற்றவர்கள் அதை நோக்கிப் பறக்க முடியாது! எனவே, அவர்களை ஏற்றிக் கொள்வதற்கு, முன்னரே நிர்ணயம் செய்யப் பட்ட இடங்களுக்கு, அது இறங்கி வர வேண்டும்.பிறகு தான் அவர்களோடு, ஆகாயத்தில் உயரப் பறந்து செல்லும். அதைப் போலவே,ஞானிகளும் கர்மா செய்வதற்கான ஆசையோ, தூண்டுதலோ இல்லா விட்டாலும், இறங்கி வந்து, ஆன்மீகத்தில்,அப்படிச் செய்யா விடில், முன்னேறாதவர்களுக்கு உதவி செய்கிறார்கள். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அம்சத்திலும்,அந்த பிரபஞ்ச நாயகனான இறைவனை இனம் கண்டு,அனைத்து செயல்களையும் அவனுக்கு அற்பணமாகச் செய்வதே கர்மா ஆற்றுவதற்கான சரியான வழி. தேஹாத்ம புத்தி ( தான் வெறும் உடல் தான்,வேறு எதுவுமில்லை என்ற தவறான எண்ணம்) உடையவன் வாழ்க்கை என்ற விளையாட்டில் வெற்றி பெறவே முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்; வெற்றியை நிச்சயமாக அடைவதற்கு,ஒருவன் ப்ரமாத்ம புத்தியைப் (தானே தெய்வம் என்ற விழிப்புணர்வு) பெறுதல் வேண்டும்.