azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 04 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 04 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

Remember that almost everyone in the world is bound by the rule of Karma (action). But people are so immersed in ignorance that they are unaware of their own moral or intellectual status and of the secrets of Karma. Such people can be saved only by being inspired by the example of the great. How warm is your body now? It may be about 98 degrees; how did it happen? Because the Sun bears many million times this heat at that distance, is it not? Now if the Sun feels that it will not put up with all that fire and becomes cool, what will happen to mankind? If God desists from action, imagine what will be the fate of this vast universe? The one of wisdom (Jnani) too needs to engage in activity, to remove the sloth and delusion of ordinary men. All have to obey the rule of Karma, without any deviation.(Geetha Vahini, Ch 6).
உலகில் உள்ள ஒவ்வொருவரும் கர்மா என்ற விதிக்கு உட்பட்டவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் மனிதர்கள் தங்களது ஒழுக்கம் மற்றும் புத்தியின் தகுதி மற்றும் கர்மாவின் ரகசியங்களைப் பற்றித் தெரியாது ,அறியாமையில் மூழ்கி உள்ளார்கள். இப்படிப் பட்டவர்களை மேன்மையானவர்களது முன்னுதாரணத்தினால் எழுச்சி அளித்துத்தான் காக்க இயலும். உங்களது உடலில் வெப்பம் இப்போது என்ன ? அது 98 டிகிரிக்கள் இருக்கலாம்; அது எவ்வாறு ஏற்பட்டது? ஏனென்றால் சூரியன் அந்த அதிகத் தொலைவில் இதை விட கோடிக்கணக்காண அளவு அதிகமான வெப்பத்தைத் தாங்கி இருப்பதால் தான் அல்லவா? இப்போது சூரியன் தான் இனிமேல் இவ்வளவு வெப்பத்தை சகித்துக் கொண்டு இருக்க முடியாது என எண்ணி, குளிர்ச்சியாகி விட்டால், மனித குலத்தின் கதி என்னாகும்? ஒருவேளை இறைவன் செயலாற்றுவதிலிருந்து விலகி விட்டால், இந்தப் பரந்த பிரபஞ்சத்தின் விதி என்னாகும்? ஞானி கூட,சாதாரண மனிதர்களின் சோம்பேரித்தனம் மற்றும் மாயையை விலக்குவதற்காக கர்மாவில் ஈடுபட்டுத் தான் ஆக வேண்டும். அனைவரும் கர்மா என்ற விதிக்கு, விலக்கு இன்றி பணிந்து தான் ஆக வேண்டும்.