azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

You may wonder why liberated ones (Jnanis) should still do Karma (action). Well, people usually follow the ideal set by those in higher levels. Their acts form the basis of Right Conduct (Dharma). If Jnanis are inactive, how are ordinary mortals to save themselves? They will have no guide and will lose themselves in the easy paths of sensory pleasures. The duty of the wise is to foster the right and practice it before others, so that they too may be prompted to follow, drawn by the hope of becoming as contented and as joyful as the jnanis. The wise have to do and get done, see and show, so that the rest might be persuaded to follow the example set by them. The sun and the moon carry on their routine tasks; wind and fire have to perform their duties without demur. Hence, each one should perform one’s task without fail and with care.(Geetha Vahini, Ch 6.)
(பந்தங்களிலிருந்து விடுதலை அடைந்த) ஞானிகள் இன்னும் ஏன் கர்மாவில் ஈடுபடுகிறார்கள் என்று நீங்கள் வியக்கலாம். பாருங்கள், மனிதர்கள் சாதாரணமாக தங்களை விட உயர்நிலையில் உள்ளவர்கள் நிலை நாட்டும் இலட்சியங்களையே பின்பற்றுவார்கள். அந்த ஆன்றோர் ஆற்றும் பணிகளே தர்மத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. ஞானிகள் செயலாற்றாது இருந்தால் சாதாரண மனிதர்கள் தங்களை எப்படிக் காப்பாற்றிக் கொள்ள முடியும்? வழிகாட்டுதல் இன்றி, புலனின்பங்களின் எளிதான வழிகளில் (ஈர்க்கப்பட்டு ) , அவர்கள் தங்களையே இழந்து விடுவார்கள். சான்றோர்களின் கடமை தர்மத்தைப் பேணி, மற்றவர் முன்னிலையில் அதன்படி நடந்து காட்டுவதே; அதனால், ஞானிகளைப் போல திருப்தியுடனும் , ஆனந்தத்துடனும் இருக்க முடியும் என்ற நம்பிக்கையினால் கவரப்பட்டு, மற்றவர்களும் அவ்வாறே நடக்க வேண்டும் என்று தூண்டப் படுவார்கள். ஆன்றோர்கள் செய்ய வேண்டும்,செய்விக்க வேண்டும், கண்டு,பிறருக்கு அதைக் காண்பிக்க வேண்டும்; அப்போது தான் மற்றவர்களும் அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு அவற்றைப் பின்பற்ற இசைவார்கள். சூரியனும்,சந்திரனும் தத்தம் நித்ய கடமையை ஆற்றுகின்றனர்;காற்றும்,நெருப்பும் அலுக்காது தம் கடமைகளைச் செய்தாக வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமது கடமைகளை தவறாது,கவனத்துடன் ஆற்ற வேண்டும்.