azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 01 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 01 Jan 2012 (As it appears in 'Prasanthi Nilayam')

The relationship between the worker and the employer should be like that between the heart and the body. Both are bound intimately with each other; they depend on each other for their very existence. Love and affection have to govern the relationship between the two, not hatred or envy. Work in the spirit of love; it will lead you to worship. That is to say, work without any regard to the proportion of benefit you derive from it. Work, since it is your duty; work since you love to work, since that is the way you can offer God the gratitude for the skills endowed upon you. This kind of work leads you to wisdom, which is the recognition of the Divine in every being. May the New Year grant you mental peace and may your life's ideal of self-realisation be fulfilled. May all comforts and contentment be added unto you. This is My blessing.
ஒரு முதலாளிக்கும்,தொழிலாளிக்கும் இடையே உள்ள உறவு, இதயத்திற்கும் உடலுக்கும் இடையே உள்ள உறவைப் போன்று இருக்க வேண்டும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாகக் கட்டுப் பட்டு உள்ளவரே; அவர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கே ஒருவரை ஒருவர் சார்ந்து உள்ளனர். அன்பும், பாசமுமே அவர்கள் இருவரது உறவை நடத்த வேண்டுமே அன்றி, வெறுப்பும் பொறாமையும் அல்ல. அன்பின் உணர்வோடு பணி ஆற்றுங்கள்; அதுவே உங்களை இறை வழிபாட்டிற்கு இட்டுச் செல்லும். அதாவது,உங்களுக்கு அந்தப் பணியால் எந்த அளவு ஆதாயம் கிடைக்கும் எனக் கருதாது, பணி ஆற்றுங்கள். பணி ஆற்றுங்கள்,ஏனெனில் அது உங்கள் கடமை;பணி ஆற்றுவதை நீங்கள் விரும்புவதால் செய்யுங்கள், ஏனெனில் உங்களுக்கு அளிக்கப் பட்டுள்ள திறமைகளுக்கு,நீங்கள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முறை அதுவே. இப்படி ஆற்றப்புடும் பணி,ஒவ்வொரு ஜீவ ராசியிலும் தெய்வீகம் உறைகின்றது என்பதை உணர வைக்கும் ஞானத்திற்கு உங்களை இட்டுச் செல்லும். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மனச்சாந்தி அளிக்கட்டும்; மேலும் உங்களது வாழ்வின் மேன்மையான குறிக்கோளான தன்னை உணர்தல் என்ற விருப்பம் நிறைவேறட்டும். எல்லா சௌகரியங்களும்,மனத்திருப்தியும் உங்களுக்குக் கிடைக்கட்டும். இதுவே எனது ஆசி.