azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Jesus sacrificed his life for the regeneration and welfare of mankind. He also proclaimed the truth: One Spirit resides in all beings. He said, “All lives are one, my dear son. Be alike to everyone." You must regard the body as the temple of the Spirit; bear in mind that Divinity is ever within you. Human body is a vesture for the Spirit. Only when you realise this truth can you begin to experience the Divine. Remember, wherever you may go, the Eternal Spirit remains with you. People may be different in form and name, in colour and nationality, and from varied historical circumstances. But God has no such differences. Hence you should not cavil at any religion or attack it or deride it. You may profess whatever faith you like. But you should not disparage another's beliefs. It is a travesty of devotion. We must always respect the divine that is in every being.( Divine Discourse, Dec 25, 1985.)
ஏசு கிறிஸ்து,மனித குலத்தின் புனருத்தாரணத்திற்காகவும்,நலனுக்காகவும்,தனது உயிரைத் தியாகம் செய்தார். அனைத்து உயிர்களிலும் உறையும் ஆத்மா ஒன்றே என்ற உண்மையையும் பறை சாற்றினார். அவர்,'' அன்பு மகனே !அனைத்து உயிரினங்களும் ஒன்றே, அனைவரிடத்திலும் ஒன்று போலவே இரு'' என்று அறிவுறுத்தினார். இந்த உடலை ஆத்மா உறையும் கோவிலாக நீங்கள் கருத வேண்டும்; தெய்வீகம் உங்களுள் எப்போதும் இருக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். மனித உடல், ஆத்மாவிற்கு உடை போன்றது. இந்த உண்மையை நீங்கள் உணரும்போதுதான், தெய்வீகத்தை அனுபவிக்கத் தொடங்குகிறீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், என்றும் நிலையான ஆத்மா உங்களுடன் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மனிதர்கள் பல உருவங்கள், பெயர்கள் , நிறம் மற்றும் நாடுகள் மற்றும் பலதரப்பட்ட சரித்திர சூழ்நிலைகளிருந்தவர்களாக இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு இப்படிப்பட்ட வித்தியாசங்கள் இல்லை. எனவே நீங்கள் எந்த மதத்தையும் கேலி செய்வதோ அல்லது தாக்குவதோ அல்லது மட்டம் தட்டவோ கூடாது. உங்களுக்குப் பிடித்த எந்த மதத்திலும் நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், நீங்கள் பிறரது நம்பிக்கைகளை இகழக் கூடாது. அது பக்தியையே கேலிக் குறியாக்கி விடும். நாம் ஒவ்வொருள்ளும் உறையும் தெய்வீகத்தை மதிக்க வேண்டும்.