azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 23 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 23 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine is not separate from you. You are the Divine. This conviction must grow in you. In the beginning you regard yourself as a mere human being. Then gradually you realize your potential divinity. Finally you realize your own inner Divinity. Embark on this journey to attain union with the Divine from now. Time waits for no one. Concentrate all your efforts to realize God. The primary requisite is the elimination of the ego; without this, the bliss of Divinity cannot be experienced. Ostentatious worship, wealth, power and position will not help you in the spiritual quest. They cannot confer peace or remove the fear that haunts man all the time. Only the man of faith is completely free from fear. Hence develop faith in God and lead a God-directed life. The one who is conscious of one’s faults is blessed. Equally blessed are those who see the good in others.( Divine Discourse, Dec 25, 1987)
இறைவன் உங்களிலிருந்து வேறானவன் இல்லை. நீங்களே இறைவன். இந்த உறுதியான நம்பிக்கை உங்களுள் வளர வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் உங்களை வெறும் மனிதராகக் கருதுகிறீர்கள். பின்னர், படிப்படியாக உங்களது தெய்வீக சக்தியை உணருகிறீர்கள்.இறுதியில், உங்களுள் உறையும் தெய்வீகத்தை உணருகிறீர்கள். இறைவனுடன் ஸங்கமம் ஆகும் இந்தப் பயணத்தை இப்போதே துவங்குங்கள். காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.உங்களது முயற்சிகள் அனைத்தையும் இறைவனை உணருவதில் ஒரு முகப் படுத்துங்கள். இதற்கு முதல் தேவை அஹங்காரத்தை அழிப்பதே; அதைச் செய்யாமல் தெய்வீகப் பேரானந்தத்தை அனுபவிக்க இயலாது. ஆடம்பரமான வழிபாடு,செல்வம்,அதிகாரம், மற்றும் பதவி ஆன்மீகத் தேடலில் உங்களுக்கு உதவி செய்யாது. அவை உங்களுக்கு சாந்தி அளிக்கவோ,மனிதனை எப்போதும் வாட்டும் பயத்தைப் போக்கவோ முடியாது.தெய்வ நம்பிக்கை உள்ள மனிதனே பயத்திலிருந்து முழுமையாக விடுபட முடியும். எனவே, இறைவன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, இறைவனைக் குறித்த வாழ்க்கையை நடத்துங்கள். தனது குறைகளை உணர்ந்தவர் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப் பட்டவர். மற்றவர்களிடம் நல்ல குணங்களையே காண்பவரும் இதே போன்று ஆசீர்வதிக்கப் பட்டவரே.