azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! There is nothing more precious in the world than Time; do not waste even a single minute of it. People today tend to waste their time in selfish pursuits instead of devoting it to selfless service. They are eager to receive help from others, but have no desire to be helpful. There are two types of human beings - the degraded and the sublime. The degraded are those who seek or receive things from others and not only forget to repay the obligation, but even try to harm those who have helped them. The sublime are those whose natural trait is to go to the aid of others. If they give a word they will try to honour it, whatever be the difficulties and obstacles. Through good deeds and sacrifice, foster the feeling of love, get rid of evil traits and lead a worthy life.( Divine Discourse, Dec 25, 1985)
அன்பின் வடிவங்களே ! இந்த உலகில் காலத்தை விட விலைமதிப்புள்ளது எதுவும் இல்லை; அதன் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காதீர்கள். மனிதர்கள் இன்று தன்னலமற்ற சேவையில் காலத்தைப் பயன்படுத்தாமல், சுயநலமான செயல்களில் அதை வீணடிக்க முற்படுகிறார்கள். மற்றவர்களிடமிருந்து உதவி பெற விழைகிறார்களே அன்றி பிறருக்கு உதவ விரும்புவதில்லை.இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்; தரமற்றவர்கள் மற்றும் பண்பட்டவர்கள். பிறரிடமிருந்து வேண்டி பொருட்களைப் பெற்றுக் கொண்டு, அவற்றைத் திருப்பித் தராமல் இருப்பதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு உதவியவர்களுக்கு தீங்கிழைக்க முயல்வோரே தரமற்றவர்களாவர். பிறருக்கு உதவுவதையே தங்களது இயல்பாகக் கொண்டவரே பண்பட்டவர்கள். எப்படிப் பட்ட துன்பங்கள் மற்றும் இடையூறுகள் வந்தாலும் இவர்கள் ஒரு வாக்கு அளித்து விட்டால், அதைக் காப்பாற்றுவார்கள். நற்செயல்கள் மற்றும் தியாகத்தினால் அன்பைப் பேணி வளர்த்து,தீய குணங்களை விட்டொழித்து, போற்றத்தக்க வாழ்க்கையை நடத்துங்கள்.