azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Dwell always on noble thoughts. Develop attachment towards the Universal Lord and you will grow in love and splendour. The Lord is neither benignant nor malignant. He reflects to you, your own spiritual progress as Grace. Cultivate love towards Him. Likes and dislikes are truly the products of habit and training. The senses drag you away from Him, but do not yield; they will lie low soon. Sincere yearning born of steady discrimination alone can help you. The Divine wants the cream of virtue that is kept in the pot of your heart. This cream is the Soul (Atma), which is secured after vigorous churning. Offer to your Beloved Lord the fragrance of your virtues, the courage of your heart and the wisdom of your experience. That is what the Lord really wants. I bless you that you may grow in these from day to day. ( Sathya Sai Speaks, Vol V, Jan 29, 1965.)
சிறந்த சிந்தனைகளிலேயே எப்போதும் உங்கள் மனதை உறையச் செய்யுங்கள். உலகளாவிய இறைவன் மீது பற்று வையுங்கள்;நீங்கள் அன்பிலும்,பேரொளியிலும் வளர்வீர்கள்.இறைவன் நன்மை அளிப்பவனும் அல்ல, தீமை அளிப்பவனும் அல்ல. அவன் உங்களது ஆன்மீக முன்னேற்றத்தை அருளாக உங்களுக்கு பிரதிபலிக்கின்றான். அவன் பால் அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.பழக்கம் மற்றும் பயிற்சியினால் வருபவையே விருப்பு வெறுப்புக்கள். புலன்கள் உங்களை அவனிடமிருந்து விலக்கி இழுத்துச் செல்லும் ஆனால் அதற்கு இடம் கொடுக்காதீர்கள்; சிலகாலம் அவை அடங்கி இருக்கும். நிலையான பகுத்தாராய்தலால் பிறக்கும் மனமார்ந்த ஏக்கம் மட்டுமே உங்களுக்கு உதவும்.உங்கள் இதயம் என்னும் பானையில் இருக்கும் நல்லொழுக்கம் என்ற வெண்ணையைத் தான் இறைவன் விரும்புகிறான். விறுவிறுப்பான கடைதலின் மூலம் பெறப்பட்ட இந்த வெண்ணை தான் ஆத்மா. உங்கள் நல்லொழுக்கத்தின் நறுமணத்தையும்,இதயத்தின் துணிவையும், அனுபவத்தின் ஞானத்தையும் உங்களது அன்பிற்குரிய இறைவனுக்கு அர்ப்பணியுங்கள். இதைத் தான் இறைவன் விரும்புகிறான். நீங்கள் ஒவ்வொரு நாளும், இதில் வளர வேண்டும் என்று உங்களை ஆசீர்வதிக்கிறேன்.