azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Many commentators of the Geeta have interpreted that the giving up of the fruits of one’s actions is advised because one has no right or authority to desire the fruits. This is a great blunder. When one has the right to engage in action, one also has the right over the fruits of that action; no one can deny or refuse this. But the doer can, out of one’s own free will and determination, refuse to be affected by the result, whether favourable or unfavourable. The Lord has said in the Geeta, 'refuse the fruit' (maa phaleshu), which means, the deed does yields results, but the doer should not do it with the results in view. If Krishna's intention was to say that the doer has no right over the fruits of action, He would have said, 'It is fruitless' or 'na phaleshu,' (na, meaning no). To engage oneself in karma, knowing well that the result will follow, and yet being unattached to it or being unconcerned with it, is the sign of purity. ( Geeta Vahini, Ch 5)
ஸ்ரீமத் பகவத் கீதையின் விளக்குவுரையாளர்களில் பலர், ஒருவரது செயல்களின் பலன்கள் விரும்புவதற்கு அவருக்கு எந்த உரிமையோ அல்லது அதிகாரமோ கிடையாததால்,அவற்றை விட்டு விட வேண்டும் என்று விளக்குகிறார்கள். இது மிகப் பெரிய தவறு. பணியில் ஈடுபடுவதற்கு ஒருவருக்கு உரிமை இருக்கும் போது, அவருக்கு அதன் பலன்களின் மீதும் உரிமை உண்டு; இதை யாரும் மறுக்கவோ,தடுக்கவோ முடியாது. ஆனால்,பணியாற்றுபவர்,தனது சொந்த மனத்திண்மை ,மற்றும் உறுதியின் மூலம்,அந்த பலன்கள் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருந்தாலும் அவற்றால் பாதிக்கப்பட மறுக்கிறார். பகவான், ஸ்ரீமத் பகவத் கீதையில்,'' பலன்களை மறுத்து விடு ( மா பலேஷூ) அதாவது,செயல்கள் பலன்களைத் தரத்தான் செய்யும், ஆனால் செய்பவர் அந்தப் பலன்களை அடையும் நோக்கத்தோடு செய்யக் கூடாது ''என்கிறார். ஸ்ரீகிருஷ்ணரின் நோக்கம்,செய்பவருக்கு பலன்களின் மீது உரிமை இல்லை என்று சொல்வதாக இருந்தால்,அவர் '' பலனற்றவை அதாவது '' நா பலேஷூ '' என்று கூறியிருப்பார். பலன்கள் தொடரும் என்பதை அறிந்து கர்மாவில் ஒருவர் ஈடுபட வேண்டும்; அதே சமயம் அவற்றின் மீது பற்று இன்றியும் அவற்றைப் பற்றிக் கவலை இன்றியும் இருப்பதே, தூய்மையின் அடையாளமாகும்.