azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 16 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 16 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Persisting in the spiritual discipline of ignoring the body means turning away from the temptations of the senses, that is, overcoming the six inner enemies – desire, anger, greed, attachment, pride and malice. Anger turns a person into a drunken brute. The other impulses are equally vicious. Seek only salutary action that will win His grace. Eat only Saathvik (simple, pure, vegetarian) food, that does not disturb the equanimity you earn from your spiritual activities. Do not break the even tenor of your spiritual practices. Remind yourself, how the great saint Ramadas never gave up his Naamasmarana (Contemplation of the Lord) in spite of the travails of living in jail. If you immerse yourself in Deha Tathwa, body consciousness, you start declining. But you can be really healthy and happy only when you are immersed in the universal and essential nature of the Self - Aatma Tathwa.( Sathya Sai Speaks, Vol V, Jan 29, 1965)
உடலை உதாசீனப்படுத்தும் ஆன்மீக சாதனையை உறுதியாகத் தொடர்வது என்றால், புலன்களின் கவர்ச்சிகளிலிருந்து விலகி இருத்தல் என்று பொருள்; அதாவது நமது உள் எதிரிகளான ஆசை (காமம்),கோபம்(க்ரோதம்),பேராசை(லோபம்), பற்று(மோஹம்), கர்வம்(மதம்),மற்றும் பொறாமை(மாத்சர்யம்) ஆகியவற்றை வெல்வதாகும். கோபம் ஒருவரை குடிகார மிருகமாக மாற்றி விடுகிறது. மற்ற தூண்டுதல்கள்களும் இதை ஒத்த கொடியவையே. இறை அருளை நல்கும் போற்றுதலுக்குறிய செயல்களையே நாடுங்கள். ஆன்மீக சாதனைகள் மூலம் நீங்கள் அடையும் சமச்சீரான மனப்பாங்கைக் குலைக்காத சாத்வீக உணவையே உட்கொள்ளுங்கள். உங்களது ஆன்மீக சாதனைகளின் சீரான குணத்தைக் கைவிடாதீர்கள். எப்படி,உயர்ந்த அருட் தொண்டரான பக்த ராமதாஸர் தான் சிறையில் வாடும் போதும் நாமஸ்மரணையை கைவிடாது இருந்தார் என்பதை நினைவு கூறுங்கள். நீங்கள் உடல் சிந்தனையில்( தேஹ தத்துவம்) மூழ்கி விட்டீர்களானால், வீழ்ச்சி அடைவீர்கள். ஆனால், நீங்கள் இன்றிமையாத ,எங்கும் நிறைந்த ஆத்ம தத்துவத்தில் திளைத்திருந்தால் மட்டுமே உண்மையில் ஆரோக்கியமாகவும் , ஆனந்தமாகவும் இருக்க முடியும்.