azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If you have an eye on the fruits of your actions, you are liable to be affected by worry, anxiety and restlessness. You may ask: “If the fruits have to be given up, how can one manage to live?” Let Me ask you - Why this weakness of heart, this nervousness? He who has assured, 'Yogakshemam vahamyaham' (I will take care of all your needs - worldly and spiritual) will certainly look after that. He will give the wherewithal and the means. The seeker (Karmayogi) who has learnt the secret of action (Karma) combined with sacrifice (Phala thyaga) should have Sama buddhi (equanimity), more than Sanga buddhi (mind attached to the world). Sanga buddhi leads one to think: “This action is mine; its results are due to my endeavours. I am the person entitled to it". Such thoughts bind the doer. Krishna in the Geeta declares, “Samathwam yogamuchyathe” (The end result of all spiritual practices is the attainment of equanimity). One should rise above this Sanga buddhi and try to attain Samathwam.( Geeta Vahini, Ch 5.)
உங்கள் பார்வை நீங்கள் ஆற்றும் செயல்களின் பலன்கள் மீது இருக்குமானால், கவலை,கலக்கம், அமைதியின்மை அறியவற்றிற்கு நீங்கள் ஆளாக வேண்டி இருக்கும். '' பலன்களைத் துறந்து விட வேண்டும் என்றால் வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது ?'' என்று நீங்கள் கேட்கலாம். நான் உங்களைக் கேட்கிறேன்,எதற்கு இப்படிப்பட்ட பலஹீனமான இதயம் , இந்த பரிதவிப்பு? '' யேகஷேமம் வஹாம்யஹம்'' அதாவது உங்களது உலகியலான, மற்றும் ஆன்மீகத் தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன் என்ற உறுதி அளித்துள்ள இறைவன் கட்டாயம் அதைப் பார்த்துக் கொள்வான். அவன் அதற்கான சாதனங்களையும் வழிவகைகளையும் அளிப்பான். கர்மத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்ட கர்மயோகி பலன்களைத் தியாகம் செய்வதுடன், சங்க புத்தியை,(உலகப்பற்று) விட சமபுத்தியைப் ( ஒரே நிலையான புத்தி) பெற்றிருக்க வேண்டும். சங்க புத்தி,'' இது என்னுடைய செயல்;இந்தப் பலன்கள் என்னுடைய முயற்சிகளினால் தான் கிடைத்தவை. எனக்குத் தான் இதில் உரிமை உள்ளது'' என்று ஒருவரை எண்ண வைக்கும். இப்படிப் பட்ட எண்ணங்கள் செயலாற்றுபவரை பிணைத்து விடும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,ஸ்ரீமத் பகவத் கீதையில், ''சமத்துவம் யோகமுச்யதே '' அதாவது அனைத்து ஆன்மீக சாதனைகளுக்கும் முடிவான பலன் சமச்சீரான மனநிலையை அடைவதே என்று பறைசாற்றுகிறார். ஒருவர் இந்த சங்கபுத்தி நிலையிலிருந்து உயர்ந்து,சமத்துவத்தை அடைய முயல வேண்டும்.