azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 13 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 13 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

People perform acts prompted by the desire for the fruits thereof; if an act does not yield desired results, they will not do the act thenceforth. Profit, gain, reward, result - man seeks these alone. But this rule does not apply to those who take the Geetha in their hands to drink the nectar of the Lord's message. Not all do yearn for the nectar; and if you do, it is evident that you aspire for eternal joy and liberation. Then you must pay the price of giving up the desire for the fruits of your actions, and dedicate everything at the feet of the Divine. Desist from sin, injustice and vice. Do not insult elders, desert the virtuous, and wound the self-respect of the good. Dedicate yourself to the cause of establishing Santhi and Soukhya (peace and plenty) in the world, and even if you must struggle, realize that justice is bound to win.( Geeta Vahini, Ch 4 )
மனிதர்கள் தங்களது செயல்களின் பலன்களில் நாட்டம் கொண்டு அவற்றைப் புரிகிறார்கள்; ஒருவேளை அந்த செயல் எதிர்பார்த்த பலன்களைத் தராவிட்டால், அவற்றை அதற்குப் பிறகு செய்ய மாட்டார்கள். லாபம், ஆதாயம்,பரிசு,பலன்-மனிதன் இவைகளை மட்டுமே நாடுகிறான். ஆனால் இந்த விதி,பகவானுடைய நல்லுரை என்னும் அமிர்தத்தைப் பருகுவதற்காக ஸ்ரீமத் பகவத் கீதையை கையில் ஏந்தி இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அனைவருமே அமிர்தத்தை வேண்டுவதில்லை; ஒருவேளை நீங்கள் அப்படிச் செய்தால், நிலையான ஆனந்தத்தையும், விமோசனத்தையும் நாடுபவர்கள் என்பது தெளிவாகிறது. பின்னர் நீங்கள் பலன்களை நாடும் ஆசையை விட்டு விட வேண்டும் என்ற விலையைக் கொடுத்து , அனைத்தையையும் இறைவனது பாதங்களில் அர்ப்பணம் செய்தாக வேண்டும். பாவம் , அநீதி, மற்றும் தீய பழக்கங்களைத் தவிர்த்து விடுங்கள். முதியோர்களை அவமதிக்காதீர்கள், நல்லொழுக்கமுடையோரை கைவிடாதீர்கள், நல்லவர்களது சுய மரியாதையை புண்படுத்தாதீர்கள்.இந்த உலகில் சாந்தியையும்,சௌக்கியத்தையும் நிலை நாட்டும் பணியில் உங்களை அர்ப்பணித்துக் கொண்டு, நீங்கள் போராட வேண்டி இருந்தாலும்,நீதி கட்டாயம் வெல்லும் என்பதை உணர்ந்திருங்கள்.