azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 12 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 12 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

The field of your heart must be cleared of bushes and thorns. It must be ploughed and furrowed, watered and dampened to depth. Then the seeds must be planted into the earth; not scattered on the surface. After planting the seeds, water the field, remove the weeds, keep away stray cattle, manure the plants, dust them with pesticides, and then you can reap the bounteous crop. Spiritual discipline (Sadhana) means and includes every one of these steps. If there is crooked vision, character, thought and feelings, how can devotion even sprout or bloom? If the lamp is not burning, it means that you have not lit it! Your spiritual progress is what is reflected back to you as Grace. Your decline is reflected back as its absence. Engage yourself in action that will direct your intellect and mind along divine and sublime channels, and win His bounteous grace through worthy action.( Sathya Sai Speaks, Vol 5, Jan 29, 1965.)
உங்கள் இதயம் என்னும் நிலத்திலிருக்கும் புதர்களையும், முட்களையும் களைய வேண்டும். அதை உழுது,வரப்பெடுத்து,நீர்பாய்ச்சி,குறித்த ஆழத்திற்கு ஈரமாக்கப் பட வேண்டும். பிறகு விதைகளை, நிலப்பரப்பில் சிதறலாக இன்றி,நிலத்தினுள் இட வேண்டும். விதையிட்டபிறகு, நீர்பாய்ச்சி, களை எடுத்து, திரியும் கால் நடைகளிலிருந்து காத்து, உரமிட்டு, பூச்சிக் கொல்லி தூவி எனச் செய்த பிறகு தான் நிறையான மகசூலை நீங்கள் அறுவடை செய்ய முடியும். ஆன்மீகக் கட்டுப் பாடு என்பது இந்த ஒவ்வொரு படியையும் கொண்டதே. நேர்மையற்ற பார்வை, குணநலன், எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் இருந்தால் பக்தி எவ்வாறு முளை எடுத்து மலர முடியும்? தீபம் எரியவில்லை என்றால் ,நீங்கள் அதை ஏற்றவில்லை என்று பொருள்! உங்களது ஆன்மீக முன்னேற்றமே,இறைவனது அருளாக உங்களுக்கு திரும்பவும் பிரதிபலிக்கிறது. உங்களது வீழ்ச்சி, அவன் அருள் அற்ற நிலையாக அமைகிறது. உங்களது புத்தி மற்றும் மனதை தெய்வீக மற்றும் புனிதமான வழிகளில் இயக்கும் செயல்களில் ஈடுபட்டு, இறைவனது அளவற்ற அருளை உங்களது போற்றத் தக்க செயல்கள் மூலம் பெறுங்கள்.