azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Desire the fruits of action (Karma) and you will be born again and again, caught up in that desire; give up that craving and you are liberated from the flux. The main point is to stick to the goal consistently. Your goal should be Karma (action), not Karma phala (the fruits of the action). Be aware that the desire for the fruits of one's actions is an indication of Rajoguna (quality of passionate action, resulting in pain). If you choose to remain inactive, it is an indication of Thamoguna (quality of sloth and inaction leading to ignorance)! That is even worse than Rajoguna. This lesson was not for Arjuna alone; this advice is intended for every seeker and the whole of mankind.( - Geetha Vahini, Ch 4)
கர்மாவின் பலன்களில் ஆசை வைத்தீர்களானால், அந்த வேட்கையின் பிடியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறக்க வேண்டும்; இந்த வேட்கையை விட்டு விட்டால்,அந்தச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவீர்கள். உங்கள் இலட்சியத்தை இடையறாது பற்றி இருத்தலே முக்கியமானதாகும். உங்கள் இலட்சியம் கர்மாவே இருக்க வேண்டுமே அன்றி அதன் பலன்கள் ( கர்மபலா) அல்ல. ஒருவர் தனது செயல்களின் பலன்கள் மீது நாட்டம் கொள்வது துன்பத்தில் முடிவடையும் மனக்கிளர்ச்சிகளோடு கூடிய ரஜோ குணத்தை குறிக்கிறது. செயலே புரியாமல் இருப்பதை நீங்கள் தேர்ந்து எடுத்தால், அது அறியாமைக்கு இட்டுச் செல்லும், சோம்பேறித்தனத்துடன் கூடிய தமோகுணத்தைக் குறிக்கிறது. அது ரஜோகுணத்தை விட மோசமானது. இந்தப் பாடம் அர்ஜூனனுக்கு மட்டுமல்ல; கீதையின் அறிவுரைகள், ஞானம் தேடும் ஒவ்வொருவருக்கும், மனித குலம் அனைத்திற்குமே உரித்ததாகும்.