azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

A true hero is the steady person who is not agitated in the least by ups and downs caused by roaring waves on the sea of life. Such a person never loses poise; it becomes part of one's nature! The one who keeps to his schedule of spiritual discipline whatever be the attractions or distractions, is a wise person, also referred to as Dheera. Dhee means buddhi (intellect), and this is the true quality of man. It is not the attire or the moustache that marks out the 'hero'. True humanness blossoms with the rejection of the duality of joy and sorrow, and all your exploits should be to conquer these two. Your victory should be over internal foes, rather than external ones. Then the gain you acquire is immortality! Things of the world cannot confer that state of bliss. When you truly and steadily rise above joy and grief, the bliss you attain is absolute, independent and full. - Geeta Vahini, Ch 4.
வாழ்க்கை என்னும் கடலில் ஆற்பரிக்கும் அலைகளால் ஏற்படும் ஏற்ற,இறக்கங்களால் சிறிதும் குழப்பமடையாத, நிலை குலையாத மனிதனே உண்மையான வீரன். இப்படிப் பட்டவர் தனது சமநிலையை ஒரு போதும் இழப்பதில்லை; அது அவரது இயல்பாகவே ஆகி விடுகிறது! எப்படிப்பட்ட கவர்ச்சிகள், கவனச் சிதறல்கள் இருந்தாலும், தனது ஆன்மீகக் கட்டுப்பாட்டு அட்டவணையைக் கடைப் பிடிப்பவரே அறிவுள்ள மனிதர்; அவரே'' தீரன் '' எனப்படுகிறார். '' தீ '' என்றால் புத்தி; இதுவே உண்மையான மனித குணம். அணியும் ஆடையோ,மீசையோ ''வீரனை'' க் குறிப்பதில்லை. உண்மையான மனிதப் பண்பு சுகம் ,துக்கம் என்ற இரட்டை நிலையை நிராகரிக்கும் போதுதான் மலருகிறது; மேலும் உங்களது முயற்சிகள் எல்லாம் இந்த இரண்டையும் வெல்வதில் தான் இருக்க வேண்டும். உங்களது வெற்றி உள்ளார்ந்த எதிரிகளின் மீது இருக்க வேண்டுமே அன்றி வெளியில் உள்ளவர் மீதல்ல. பின் நீங்கள் பெறும் லாபமே அமரத்துவம் !உலகிலுள்ள பொருட்கள் உங்களுக்கு இந்த பேரானந்த நிலையை அளிக்க முடியாது. எப்போது ,நீங்கள் உண்மையாகவும் ,சீராகவும் சுக-துக்க நிலையிலிருந்து விடுபட்டு உயருகிறீர்களோ,அப்போது நீங்கள் பெறும் பேரானந்தம் முழுமையானதும், சுயாதீனமானதும்,நிறைவானதும் ஆகும்.