azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

To give up body consciousness must be your deeksha (steady pursuit). This must express itself in actual practice as discipline (nishtha) and training of senses and emotions (sikshana). Water or fire as such cannot move a train. They must both co-operate to produce a third element - steam, which moves the train forward. Treat discipline as more important than even food. This body (deha) is but an instrument to realize the Indweller (Dehi). With determination and faith feed your spirit as scrupulously as you feed the body. You will attain union with the Indweller only when your mental agitations are curbed and equanimity is achieved. Whatever be the path - devotion, wisdom or selfless action, it must lead you to achieve equanimity. To cross safely across the flood of birth-death-continuum, you must build this sturdy safe bridge called unflinching discipline (nishtha). - Sathya Sai Speaks, Vol V, Jan 29, 1965
உடல் உணர்வைத் துறப்பதே உங்களது விடாமுயற்சியாக ( திதிக்ஷா) இருக்க வேண்டும். இது நடைமுறையில் கட்டுப்பாடாகவும் (நிஷ்டா), புலன்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் பயிற்சி (சிக்ஷணா) அளிப்பதாகவும் வெளிப்பட வேண்டும். தண்ணீரோ,நெருப்போ தனியாக ஒரு ரயிலை இயக்க முடியாது. இரண்டும் ஒத்துழைத்து, மூன்றாவது பொருளான நீராவியை உற்பத்தி செய்தால் தான், அது ரயிலை முன்னோக்கி நகர்த்திச் செல்லும். கட்டுப்பாட்டை,உணவை விட மிக முக்கியமானதாகக் கருதுங்கள். இந்த உடல்( தேஹம் ), இதில் உள்ளுறைபவனை (தேஹி) உணர்வதற்கான கருவியே அன்றி வேறில்லை. உறுதி மற்றும் நம்பிக்கையோடு, இந்த உடலுக்கு எவ்வளவு கவனமாக உணவளிக்கிறீர்களோ, அவ்வளவு கவனமாக ஆத்மாவுக்கும் செருவூட்டுங்கள். உங்கள் மனப் போராட்டங்களைத் தடுத்து, சமச்சீரான மனப்பாங்கைப் பெற்றால் தான், உள்ளுறையும் ஆத்மாவோடு ஐக்கியமாக இயலும்.பக்தி,ஞானம் அல்லது தன்னலமற்ற சேவை போன்ற எந்தவிதமான பாதையாக இருந்தாலும், அது சமச்சீரான மனநிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். பிறப்பு இறப்பு என்று தொடர்ந்து வரும் இந்த வெள்ளத்தை பாதுகாப்பாகக் கடக்க வேண்டும் என்றால், நீங்கள் வலிமையான, நிலை குலையாத கட்டுப்பாடு( நிஷ்டா) என்ற பாலத்தைக் அவசியம் அமைத்தே ஆக வேண்டும்.