azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

If the senses keep to their places there is no reason to fear. It is only when they start to contact the objects around, the twin distractions of joy and grief are produced. When you hear someone defaming you, you experience anger and grief; but there is no such agitation if the words do not fall on your ears. The attraction of the senses to the objects is the cause of grief and its twin, joy. So long as the world is there, sense-object contact cannot be avoided; similarly till the time one has the burden of previous births, one cannot escape the joy-grief complex. But of what use is it to wait till the waves are silenced, before you wade into the sea for a shower? The wise one learns the trick of avoiding the blows of the onrushing waters and the drag of the receding waves. Wear the armour of fortitude (thithiksha), and weather the blows of good and bad fortune. Thithiksha means equanimity in the face of opposites, that is, putting up boldly with duality.(Geeta Vahini, Ch 4.)
புலன்கள் தங்கள் நிலையிலேயே இருக்கும் வரை, பயப்படத் தேவை இல்லை.எப்போது அவை தம்மைச் சுற்றியுள்ள பொருட்களோடு தொடர்பு கொள்ளத் துவங்குகின்றனவோ, அப்போது தான் சுகம்,துக்கம் என்ற இரண்டு கவனச்சிதைவுகள் உருவாகின்றன. உங்களை யாராவது தூற்றுவதைக் கேட்டால் கோபமும்,துக்கமும் உண்டாகின்றன; ஆனால்,அந்த வார்த்தைகள் உங்கள் காதில் விழாவிட்டால், அப்படிப் பட்ட மனக் கிளர்ச்சிகள் உண்டாவதில்லை. உலகம் உள்ள வரை புலன்கள்- பொருட்களின் தொடர்பைத் தவிர்க்க இயலாது; அதே போன்று முந்தைய பிறவிகளின் சுமைகள் இருக்கும் வரை சுகம் துக்கம் என்ற சிக்கலிலிருந்து தப்ப முடியாது. கடலில் குளிப்பதற்காக, அலைகள் ஓயும் வரைக் காத்திருப்பதனால் என்ன பயன்? அறிவுள்ள ஒருவன் பாய்ந்து வரும் அலைகளின் தாக்குதலையும், பின் வாங்கும் அலைகளின் இழுப்பையும் தவிர்க்கும் வித்தையைக் கற்றுக் கொள்கிறான். மனவலிமை( திதிக்ஷா) என்ற கவசத்தை அணிந்து கொண்டு, நல்ல மற்றும் கெட்ட நிலைகளின் தாக்கத்தை சமாளியுங்கள். மனவலிமை ( திதிக்ஷா) என்றால், ஒன்றுக் கொன்று எதிரான நிலைகளில், சமச்சீரான மனநிலையோடு, அதாவது ( சுகம்,துக்கம் என்ற) இரட்டை நிலையை துணிவோடு எதிர் கொள்வதாகும்.