azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 01 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 01 Dec 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Krishna in His childhood days broke the mud pots where butter was stored by the milkmaids of Gokul. The inner meaning is that Lord broke the material casement and liberated them from their temporary attachments. He then appropriated to Himself what always belonged to Him- the butter of faith. This butter is the result of churning of the mind, the spiritual discipline of self purification. The Deha-Thathwa (I am the body) must go and transform into Dehi-Thathwa ( the belief- I am the embodied). Take a small quantity of sea water and keep it separate in a bottle; it will develop a foul smell in a few days. As long as the water remains in the sea nothing happens to it. Be in the sea (of Divinity) as a part of it. Do not separate and individualise yourself. Never isolate your body ( Deha ) separate from the Indweller ( Dehi). So long you are in the Divine Consciousness, no pain, no grief, egoism or pride can tarnish you.( Sathya Sai Speaks Vol V Jan 29 1965)
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது குழந்தைப் பருவத்தில், கோகுலத்திலிருந்த கோபிகைகள் ,வெண்ணையை வைத்திருந்த மண் பாண்டங்களை உடைத்தார். இதன் உட்கருத்து, இறைவன் அவர்களது உலகியலான கூடுகளை உடைத்து தாற்காலிகமான பந்தங்களிலிருந்து விடுவித்தார் என்பதே. அதன் பின் , அவர் எப்போதும் அவருக்கே உரித்தான நம்பிக்கை என்ற வெண்ணையை எடுத்துக் கொண்டார். ஆன்மீகக் கட்டுப்பாடான ஆத்ம சுத்திகரிப்பால் மனதைக் கடைந்து பெறப் படுவதே இந்த வெண்ணைய். '' நான் இந்த உடல்''( தேக தத்துவம்) என்பது மறைந்து, அது '' நான் இந்த உடலில் உறைபவன்''( தேஹி தத்துவம்) ஆக மாற வேண்டும். கொஞ்சம் கடல் நீரை எடுத்து ஒரு பாட்டிலில் தனியாக வையுங்கள்; சில நாட்களில் அதில் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். தெய்வீகக் கடலில் அதன் ஒரு அங்கமாக இருங்கள். உங்களைப் பிரித்து தனிமைப் படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களது உடலை( தேஹத்தை), உள் உறைபவனிடமிருந்து ( தேஹி) பிரித்து , தனிமைப் படுத்தாதீர்கள். இறை உணர்வில் நீங்கள் திளைத்திருக்கும் வரை எந்த வலியோ, துயரமோ, அஹங்காரமோ அல்லது கர்வமோ உங்களைக் களங்கப் படுத்தாது.