azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 30 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 30 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

What exists is only the perceiver of both the dream and the waking state - the "I”. Know that “I”; and know that “I” is the same as ”He” (God). You can know this only by intense spiritual discipline, that is not marred by anger, envy and greed - the vices that sprout from ego. You have to carefully watch and control these vices. When you get angry, you act as if you are possessed by an evil spirit; your face becomes ugly and frightful. Like the red bulb winking when danger is approaching, your eyes and face become red and act as a warning to you. Heed that signal and quietly get away to a lonely spot. Do not give free vent to wicked words. Once you grow in wisdom, ego will naturally fall away. So develop wisdom and discriminate by knowing the ephemeral nature of all objective things. Then ego will die a natural death from the field of your heart and you will attain salvation. - Sathya Sai Speaks, Vol 5, Jan 14, 1965
'' நான்'' என்ற உணர்பவர் மட்டுமே கனவு மற்றும் விழிப்பு என்ற இரண்டு நிலைகளிலும் இருக்கிறார். அந்த '' நான்'' என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்; அந்த '' நான்'' என்பதும் '' அவன் '' என்ற இறைவனும் ஒன்றுதான் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். இதை, அஹங்காரத்திலிருந்து முளைக்கும் தீய குணங்களான கோபம், பொறாமை மற்றும் பேராசைகளால் கெடாத, ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சிகளினால் மட்டுமே உங்களால் புரிந்து கொள்ள இயலும். நீங்கள் இந்த தீய குணங்களை கவனமாக கண்காணித்து, அவற்றைக் கட்டுப் படுத்த வேண்டும். நீங்கள் கோபப்படும் போது, உங்களை ஏதோ ஒரு தீய பிசாசு ஆட்கொண்டதைப் போல நடந்து கொள்கிறீர்கள்; உங்களது முகம் விகாரமாகவும், பயங்கரமாகவும் ஆகி விடுகிறது. ஆபத்து வருகிறது என்று மின்மினுக்கும் சிவப்பு விளக்கைப் போல, உங்களது கண்களும் முகமும் சிவந்து உங்களுக்கு எச்சரிக்கை செய்கின்றன. இந்த எச்சரிக்கைக்குச் செவி மடுத்து, அமைதியாக ஒரு தனிமையான இடத்திற்குச் சென்று விடுங்கள். கொடிய வார்த்தைகள் கட்டுப்பாடின்றி வருவதற்கு வழி அளிக்காதீர்கள். ஞானம் வளர வளர, அஹங்காரம் படிப்படியாக இயல்பாகவே வீழ்ச்சி அடையும். எனவே, ஞானத்தை வளர்த்துக் கொண்டு,உலகியலான அனைத்துப் பொருட்களின் நிலையற்ற தன்மையை பகுத்தறிந்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் இதயத்திலிருந்து அஹங்காரம் இயற்கையாகவே மறைந்து, நீங்கள் முக்தி பெறுவீர்கள்.