azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 29 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 29 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Attachment to the body produces grief of all kinds and sorts, and its immediate precursors - affection and hatred as well. These two are the results of the intellect considering some things and conditions as beneficial, and others as not; this is a delusion. Despite the knowledge of this fact, at times, you get attached to objects that you consider favourable and start hating the others. From the highest point of view, there is neither; the distinction is just meaningless. There is no two at all; then how can there be good and bad? To see two where there is only one is ignorance (Maya). The fundamental ignorance is the belief that you are the body, and this is the cause for all grief. Practise living in divine consciousness instead of body consciousness, and be free from grief and live in joy. –(Geetha Vahini, Ch 3.)
உடல் மீது வைக்கும் பற்றுதலே பல விதமான துன்பங்களை, இவற்றின் உடனடியான வழிகாட்டிகளான விருப்பு ,வெறுப்பு ஆகியவற்றையும் சேர்த்து உருவாக்குகிறது. இந்த இரண்டும், புத்தி சில நிலைகள் மற்றும் சிலவற்றை பலன் தருபவையாகவும் மற்றவற்றை அவ்வாறு இல்லாததாகவும் கருதுவதன் விளைவே ஆகும்; இது வெறும் மாயையே. இந்த அறிவு இருந்தும் கூட, சில சமயங்களில், நீங்கள் நமக்கு சாதகமானவை எனக் கருதி சிலவற்றின் மீது பற்று வைத்து, மற்றவற்றை வெறுக்கத் தொடங்குகிறீர்கள். மிக உயர்ந்த நிலையிலிருந்து நோக்கினால்,அவை இரண்டுமே இல்லாதவை;இந்த பாகுபாடுகள் அர்த்தமற்றவை. இரண்டாவது என்று ஒன்றே இல்லாதபோது, பின் நல்லவை, கெட்டவை என்று எப்படி இருக்க முடியும்? ஒன்றே ஒன்று இருக்கும் போது, அதை இரண்டாகக் காண்பது மாயையே. அடிப்படையான அறியாமை, இந்த உடலே நீங்கள் என்று நம்பிக்கை தான்; அதுவே அனைத்துத் துயரங்களுக்கும் காரணம். உடல் உணர்வை விடுத்து,தெய்வீக உணர்வில் வாழப் பழகிக் கொண்டு,துயரங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துங்கள்.