azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Perform action without hankering after the results. Do not complain that you did not get public recognition for the donations you gave to some Trust. Fruits of action, whether good or bad, have to be wholly consumed by you and you alone. The best means of liberating yourself from the consequences of your actions, is to perform them only for the sake of action. You will then be burdened neither with sin nor merit. If you crave for profit, you should be prepared to accept loss as well. If you construct a well where four roads meet, expecting to acquire the merit for quenching the thirst of men and cattle, you cannot run away from the demerit you will be credited with, when someone falls into it and drowns. The secret to a happy life is to give up the desire for the fruit of action (Karma-phala-thyaga). - Sathya Sai Speaks, Jan 14, 1965.
பலன்களுக்காக பெரிதும் விரும்பாது,உங்களது கடமையை ஆற்றுங்கள். சில அறக்கட்டளைகளுக்கு நீங்கள் கொடுத்த நன்கொடைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குறை கூறாதீர்கள். செயல்களின் பலனான பழங்களை,அவை நல்லவையோ,கெட்டவையோ,நீங்களே,நீங்கள் மட்டுமே முழுமையாக விழுங்கியாக வேண்டும். உங்கள் செயல்களின் விளைவுகளிலிருந்து, நீங்கள் விடுதலை அடைவதற்கான சிறந்த வழி, அவற்றை, அவைகளுக்காக மட்டுமே ஆற்றுவது தான். அதன் பிறகு, பாவமோ,புண்ணியமோ,அவற்றின் சுமை உங்களுக்கு இல்லை. நீங்கள் லாபத்தில் தீவிர நாட்டம் கொண்டீர்களானால்,நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில், மனிதர்களுக்கும்,விலங்குகளுக்கும் தாகத்தைத் தீர்த்து, அதன் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ஒரு கிணறைத் தோண்டி வைத்தீர்களானால், யாராவது அதில் தவறி விழுந்து, மூழ்கி விட்டால் அதனால் வரும் பாவத்திலிருந்து தப்பி ஓட முடியாது. சந்தோஷமான வாழ்வின் ரகசியம் தனது கடமையின் பலன்களின் மீது கொள்ளும் ஆசையை விட்டு விடுவதே ஆகும் ( கர்ம பல த்யாகம்).