azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

As one advances in surrender from the stage, “I am Thine” (Thavaivaaham), to that of, “You are mine” (Mamaiva-thwam) and then to “You and I are One” (Thwame-vaaham), the devotee has progressively acquired the devotion that makes one inseparable from the Lord, called Avibhaktha-bhakthi. In this stage, the devotee can no more withhold oneself and hence offers all to the Lord - that completes one’s surrender. This state of “Thou art I”, is based on the realisation that everything is the Lord Himself, nothing less. So long as body consciousness persists, the devotee is the servant and Lord, the Master. And as long as an individual feels separateness from other individuals, there is body consciousness. When one progresses beyond the limits of the body, beyond that of ‘I’ and ‘Mine’, then there is no more distinction; the devotee and Bhagavan are one and the same. In the Ramayana, Hanumantha achieved this third stage through his devotion. (- Geetha Vahini, Ch 3.)
சரணாகதியில், எப்போது ஒருவர், '' தவை வாஹம்- நான் உன்னுடையவன்'' என்ற நிலையிலிருந்து, ''மாமைவத்வம்- அதாவது நீ என்னுடையவன்'' என்ற நிலையை அடைந்து, பிறகு ''த்வமேவாஹம்- அதாவது நீயும், நானும் ஒன்றே'' என்ற நிலைக்கு முன்னேறுகிறாரோ, அந்த பக்தர் இறைவனிடமிருந்து தன்னைப் பிரித்துப் பார்க்க இயலாத '' அவிபக்த பக்தி '' என்ற பக்தியைப் படிப்படியாக பெறுகிறார். இந்த நிலையில் பக்தர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறார்; இது அவரது சரணாகதியைப் பூர்த்தி செய்கிறது. இந்த'' நீயும் நானும் ஒன்றே'' என்ற நிலை ,அனைத்தும் இறைவனே,வேறு எதுவுமில்லை என்று உணர்வதை அடிப்படையாகக் கொண்டது. உடல் உணர்வு இருக்கும் வரை பக்தன் சேவகன், இறைவன் எஜமானன். எது வரை ஒருவர் தன்னை மற்றவர்களிடமிருந்து தனித்துப் பார்க்கிறாரோ, அது வரை உடல் உணர்வு இருக்கிறது. எப்போது ஒருவர் தனது , '' நான்- எனது '' என்ற உடல் உணர்வு எல்லைகளைத் தாண்டி முன்னேறுகிறாரோ, பிறகு வேறுபாடுகள் இருப்பதில்லை; பக்தனும்,பகவானும் ஒருவரே. ராமாயணத்தில் அனுமன் தனது பக்தியினால்,இந்த மூன்றாம் நிலையை அடைந்தார்.