azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Lord Krishna did not remove the delusion of Arjuna in a trice by His resolve; He could have doubtlessly done that. But He chose to make Arjuna go through the steps of hearing, reflection and concentration, so that he could experience the truth himself. Why blame the Sun for not illumining your room? Open the doors and windows, and the Sun, that has been waiting at the doorstep for just that moment, will flood the room with light. You must use your intelligence to deserve the grace of God. That is the purpose of human effort. To help you direct your intelligence to a higher purpose and to resist the path of sensual temptations, I insist that you seek and remain in good company, the association of the holy. There is greater chance of success in one’s fight against evil, when one is in the midst of spiritual heroes.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நொடிப் பொழுதில் அர்ஜூனனுடைய மாயையை தனது ஸங்கல்பத்தினால் நீக்கவில்லை; சந்தேகமின்றி அவர் அதைச் செய்திருக்க முடியும். ஆனால், அவர் அர்ஜூனனை, கேட்டு, சிந்தித்து, தியானித்து என்ற நிலைகளை அனுபவிக்கச் செய்து, தானே சத்தியத்தை உணருமாறு செய்தார். உங்கள் அறையை வெளிச்சமாக்கவில்லை என்று சூரியனை ஏன் குறை கூறுகிறீர்கள்? உங்கள் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறங்கள்; இந்த சந்தர்ப்பத்திற்காகவே வாயிற்படியில் நிலை கொண்டுள்ள சூரியன் அந்த அறையை தனது வெளிச்சத்தால் மூழ்கடித்து விடுவார். நீங்கள் இறைவனது அருளைப் பெற உங்களது அறிவைப் பயன் படுத்த வேண்டும். அதுவே மனித முயற்சியின் நோக்கம். உங்களது அறிவை உயரிய குறிக்கோள்களை நோக்கி செலுத்த உதவுவதற்கும், புலன்களின் கவர்ச்சிப் பாதையை எதிர்கொள்ளுவதற்கும், நான் உங்களை ஆன்றோர்களின் புனிதமான ஸத்ஸங்கத்தை நாட வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். தீயவைகளை எதிர்க்கும் போராட்டத்தில், ஒருவர் ஆன்மீக வீரர்களின் மத்தியில் இருப்பது வெற்றிக்கு அதிகமான வாய்ப்பைத் தரும்.