azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Peace is a state of mind that is very much within one's own self. It emanates from one's heart. There is reaction, resound, and reflection for everything in the world. Only when there is hatred in you will you see hatred in others. At times, even if no one causes harm to you, you try to hurt others. Whatever you do to others, you will definitely experience the result of that action, and whatever you hear or experience is all due to the reaction, reflection, and resound of your own actions and feelings; others are not responsible for it. You forget this simple truth and lament, "so and so is accusing me or causing pain to me or hurting me" and so on. Many a times you tend to fight and hurt others. From today onwards, always help others, never hurt anyone. Follow your conscience, it will help you to manifest noble qualities.( Divine Discourse, Jan 14, 2009)
சாந்தி என்ற மன நிலை உங்களுக்குள்ளேயே இருக்கிறது. அது உங்களது இதயத்திலிருந்து எழுகிறது. உலகில் அனைத்திலும் பிரதிசெயல்,பிரதிஒலி,மற்றும் பிரதிபலிப்பு உள்ளது. உங்களிடம் வெறுப்பு இருந்தால் தான் மற்றவர்களிடம் வெறுப்பைக் காண்பீர்கள். சில சமயங்களில்,மற்றவர் உங்களுக்குத் தீங்கு இழைக்காத போதும், நீங்கள் மற்றவருக்குத் தீங்கு இழைக்க முயல்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன செய்கிறீர்களோ,அதன் பலனை நீங்கள் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும்; நீங்கள் கேட்பது,அனுபவிப்பது எல்லாமே உங்களது செயல் மற்றும் உணர்வுகளின் பிரதிசெயல்,பிரதிஒலி,மற்றும் பிரதிபலிப்பே அன்றி, மற்றவர்கள் இதற்குப் பொறுப்பல்ல. இந்த சாதாரண உண்மையை உணராது,'' இவர் என்னைக் குற்றம் சாட்டுகிறார், அவர் என்னைத் துன்புறுத்துகிறார் '' என்று புலம்புகிறீர்கள். பல சமயங்களில் நீங்கள் சண்டையில் இறங்க முயற்சித்து மற்றவர்களைத் துன்புறுத்துகிறீர்கள். இன்றிலிருந்து அனைவருக்கும் உதவுங்கள்; ஒருபோதும் மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காதீர்கள். உங்களது மனச்சாட்சியைப் பின்பற்றுங்கள்; அது உங்களுள் சீரிய குணங்கள் வெளிப்படுவதற்கு உதவும்.