azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 23 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 23 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

You should never get entangled in the meshes of this world and its problems. Try to escape into the purer air of the spirit as often as you can, by taking the name of the Lord. Hate and envy distort man's true charm. Anger is the fuel for all varieties of sin. Those aspiring for success in the spiritual field must therefore decide to control anger, and subdue the vagaries of the mind. They must put down their mental agitations and worries, and see that they do not create worry in others also. From this very moment, pray for the Grace of God which will enable you to control and conquer your vices. Deepen your faith in God. Expand your prema (love) and take into its fold, the whole of mankind. May you all win Truth (sathyam),Peace (shanthi) and Joy (sukham) through these means. May you merge in the source of all bliss (Aanandam).( Sathya Sai Speaks, Vol 6, Ch: 38)
நீங்கள் ஒருபோதும் இந்த உலகம் மற்றும் அதன் பிரச்சனைகள் என்ற வலையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. எவ்வளவு முடியுமோ, அவ்வளவு ஆத்மா என்ற தூய்மையான சூழ்நிலைக்கு,இறைவனது நாமத்தை எடுத்துக் கொண்டு,தப்பித்துச் செல்லுங்கள். வெறுப்பும்,பொறாமையும் மனிதனது உண்மையான அழகைக் கெடுத்து விடுகின்றன. எல்லாவிதமான பாவங்களுக்கும் கோபமே எரிபொருள். ஆன்மீகப் பாதையில் வெற்றி பெற விழைவோர்,கோபத்தைக் கட்டுப் படுத்தி,தங்களது மனதின் அலை பாயும் நிலையை அடக்க வேண்டும். தங்களது மன உளைச்சல்களையும், கவலைகளையும்அடக்கி ஆண்டு, அவை மற்றவர்களுக்கும் கவலைகளை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் கணத்திலிருந்து இறைவனது அருளுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்; அதுவே உங்களது தீய பழக்கங்களை கட்டுப் படுத்தி, அவற்றை வெல்ல உதவும். இறைவன் மீது நம்பிக்கையை ஆழ்ந்ததாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களது அன்பை விசாலமாக்கி, அனைத்து மனித குலத்தையும், அதற்குள் கொண்டு வாருங்கள். உங்கள் அனைவருக்கும் சத்யம்,சாந்தி மற்றும் சுகம் இந்த வழிகளால் கிடைக்கட்டும். நீங்கள்,அனத்து ஆனந்தத்தின் மூலத்துடன் ஒன்றிணைவீர்களாக !