azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

People surrender their dignity and status to other men and women for wealth, fame, possessions, pomp, power, etc. But rarely does one get the chance to surrender to the Lord for the sake of the Lord! How can one feel the urge to do so, so long as one craves for the materialistic objects (aadheya) and not the Source of the objects (Aadhaara)? How long can the baseless satisfy? People want the created not the creator; things from the hand, but not the Hand! Can there be an object without the cause? No. God alone is the ‘Uncaused’. It is sheer ignorance to surrender individuality for the sake of the caused. Surrender rather to the Cause, the Source, the Origin of all - Sarveswara. This is genuine surrender or Saranagathi.( - Geetha Vahini, Ch 3)
மனிதர்கள் தங்கள் பதவி, மரியாதை ஆகியவற்றை,செல்வம்,புகழ்,சொத்து,பகட்டு மற்றும் அதிகாரத்திற்காக மற்ற ஆண் மற்றும் பெண்களின் காலடியில் சமர்ப்பிக்கிறார்கள். ஆனால், அபூர்வமாகத் தான் ஒருவருக்கு தன்னை இறைவனிடம், இறைவனுக்காக அர்ப்பணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது ! ஒருவர் அனைத்துப் பொருட்களுக்கும் மூலமாக உள்ளதை (ஆதாரத்தை) நாடாது உலகியலான பொருட்களை ( ஆதேயத்தை) நாடும் வரை, இவ்வாறு செய்ய வேண்டும் என்ற வேட்கை அவரிடம் எப்படி வரும் ? ஆதாரமற்றவை எவ்வளவு காலம் திருப்தியை அளிக்கும்? படைத்தவனை நாடாது, மனிதர்கள் அவனது படைப்புக்களை நாடுகின்றனர்; அவன் திருக்கரத்தை வேண்டாது, அவன் கரத்திலிருந்து வருபவற்றை விரும்புகின்றனர். படைப்பவன் இன்றி ஒரு படைப்பு இருக்க இயலுமா? இல்லை. இறைவன் ஒருவனே ''படைக்கப் படாதவன்''.படைப்புகளுக்காக தனது தனித்தன்மையை சமர்ப்பிப்பது வெறும் அறியாமையே. அவ்வாறின்றி அனைத்திற்கும் மூலமான, படைத்தவனை, அந்த ஸர்வேஸ்வரனை சரணடையுங்கள். அதுவே உண்மையான சரணாகதி.