azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 19 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 19 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

We see in the world today disorder, violence and conflict. To cure these ills, one must shed selfishness, greed and other bad qualities, and rise above the animal nature. It is through charity (unselfishness), that you achieve purity. With purity of the heart you can attain Unity, which will then lead to Divinity. The mansion of human life should be built on charity, purity, unity and Divinity. Women play a crucial role in cultivating these four pillars. Truth, sacrifice and peace are predominant qualities in women. A good wife is of value only to her husband whereas a good mother is a national asset. Only dedicated mothers can offer to the nation children who will strive for the country’s great future. Broad-minded good mothers, who care for the purity and spiritual growth of their children and the well-being of the community, are the need of the day. (Divine Discourse, September, 1983)
நாம் இன்று உலகில்,முறையின்மை,வன்முறை மற்றும் போராட்டங்களைக் காண்கிறோம். இந்த நோய்களைக் குணப்படுத்துவதற்கு, ஒருவர் சுயநலம்,பேராசை மற்றும் பிற தீய குணங்களைக் களைந்து, மிருக குணங்களிலிருந்து மேலெழுந்து வர வேண்டும்.தன்னலம் கருதாது இருப்பதன் மூலம் தான் தூய்மை அடைய இயலும். இந்த இதயத் தூய்மை, ஒற்றுமை உணர்வை உருவாக்கி, தெய்வீக நிலைக்கு இட்டுச் செல்லும். மனித வாழ்க்கை என்ற மாளிகை,தன்னலமின்மை,தூய்மை,ஒற்றுமை மற்றும் தெய்வீகம் என்ற தூண்களின் மீது கட்டப் பட வேண்டும்.பெண்கள் இந்த நான்கு தூண்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்.வாய்மை,தியாகம் மற்றும் சாந்தி ஆகிய குணங்கள் பெண்களிடம் மேலோங்கியுள்ளன. ஒரு நல்ல மனைவி அவளது கணவனுக்குத் தான் மதிப்பானவள்,ஆனால் ஒரு நல்ல தாய் ஒரு நாட்டிற்கே சொத்து போன்றவள். கடமைப் பற்றுள்ள தாய்மார்கள் தான் நாட்டின் நல்ல எதிர்காலத்திற்காக உழைக்கும் குழந்தைகளை அளிக்க முடியும். இன்றைய முக்கியத் தேவை, தங்களது குழந்தைகள் மற்றும் சமூகத்தின், தூய்மை மற்றும்,ஆன்மீக முன்னேற்றத்தில் கவனம் கொண்ட விசால மனம் படைத்த நல்ல தாய்மார்களே.