azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 16 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 16 Nov 2011 (As it appears in 'Prasanthi Nilayam')

Consider the place and situation in which the Geetha was delivered; therein lies the significance of this discourse. On one side were the forces of good (Dharma) and on the other, that of evil (adharma); caught between these two, and unable to decide which course to adopt, Arjuna weeps in despair. This was not just his dilemma; it is a universal human problem. Arjuna did not seek from Krishna the pleasing, worldly glory of power, status and wealth (Preyas) – he sought the lasting glory of full joy (Sreyas). Arjuna said to Krishna, "Preyas can be won by human activity or Karma. Why should I crave from You what I can win by my own endeavour? Grant me Sreyas, for it is not the fruit of action (Karma), but the fruit of grace!" Thus the lord gave the Geetha for all those who like Arjuna rise to the height of absolute self-surrender (Prapaththi or Saranagathi).- Geetha Vahini, Ch 3.
ஸ்ரீமத் பகவத் கீதை அளிக்கப் பட்ட இடத்தையும் ,சூழ்நிலையையும் கவனியுங்கள்; அதில் தான் இந்த சொற்பொழிவின் முக்கியத்துவம் உள்ளது. ஒரு பக்கம் தர்மத்தின் அணி, மற்றொரு பக்கம் அதர்மத்தின் அணி; இரண்டிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு, எந்த வழியை ஏற்பது என்று முடிவு எடுக்க முடியாமல் அர்ஜூனன் நம்பிக்கை இழந்து புலம்புகிறான். இந்தக் குழப்பம் அவனுடையது மட்டுமல்ல; இது உலகளவிலான மனிதனின் பிரச்சனையே. அர்ஜூனன் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து இனிமையான உலகில் புகழ் அளிக்கும் அதிகாரம், அந்தஸ்து, செல்வம் ஆகியவற்றை வேண்டவில்லை(ப்ரேயஸ்); நிலையான முழு ஆனந்தத்தை நாடினான்(ஸ்ரேயஸ்). அர்ஜுனன்,ஸ்ரீகிருஷ்ணரிடம்,'' ப்ரேயஸை கர்மாவின் மூலம் அடைய முடியும். என்னுடைய முயற்சியாலேயே அடையக்கூடிய இதை நான் ஏன் உங்களிடம் நாட வேண்டும் ? கர்மாவின் பலனால் அல்லாது, உந்தன் கருணையின் பலனால் கிடைக்கும் ஸ்ரேயஸைத் தருவாயாக '' என வேண்டினான். எனவே தான் அர்ஜுனனைனப் போல பரிபூரண சரணாகதி நிலைக்கு உயர்ந்த அனைவருக்காகவும் பகவான் ஸ்ரீமத் பகவத் கீதையை அளித்துள்ளார்.